காலசர்ப்ப தோ‌ஷத்தால் ஏற்படும் பாதிப்புகளும் அதற்கான பரிகாரங்களும்…

திருமணத் தடை: கால சர்ப்ப தோ‌ஷம் உள்ள அனைவருக்கும் திருமண தடை ஏற்படாது. ராகு/கேதுக்கள் நின்ற நிலைக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும். திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7, 8-ல் ராகு- கேதுக்கள் இருந்தால் பாதகத்தை தரும். தசா புக்தி சாதகமாக இருந்தால் திருமணம் உரிய வயதில் நடக்கும்.சிலருக்கு காதல் திருமணத்தை நடத்தி இல்வாழ்க்கையில் சங்கடத்தை மிகைப்படுத்தும் அல்லது சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். அதனால் 27 வயதிற்கு மேல் திருமணம் நடத்துவது சிறப்பு.

திருமணத் தடை பரிகாரம்: ஜனன கால ராகு கேதுக்கள் நிற்கும் நட்சத்திரத்தின் அதிதேவதைகளுக்கு ஜென்ம நட்சத்திர நாளில் அர்ச்சனை செய்து வர வேண்டும். சுவாதி, சதயம், திருவாதிரை, அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் பிரதோ‌ஷ காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்தால் தோ‌ஷத்தின் வீரியம் குறைந்திடும்.

புத்திரபாக்கியம் : குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை, தாமதம், அடிக்கடி கருக்கலைதல் பெண் குழந்தைகள் மட்டும் இருப்பது அல்லது ஆண் வாரிசுகள் மட்டும் இருப்பது போன்ற குறைபாடு இருக்கும். சிலருக்கு பெற்ற பிள்ளைகளால் வாழ்நாள் முழுவதும் மனவேதனை இருந்து கொண்டே இருக்கும்.
புத்திரபாக்கியம் பரிகாரம் : கிருத்திகை, விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று திருச்செந்தூர் முருகனை நினைத்து 27 முறை கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும். திருவாதிரை, மகம் நட்சத்திரம் வரும் நாட்களிலும் பாராயணம் செய்யலாம்.


நோய் : தோ‌ஷத்தின் வீரியம் அதிகமாக இருந்தால் ராகு-கேதுவின் தசா, புத்தி அந்தர காலங்களில் அல்லது 6,8,12-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசா, புக்தி, அந்தர காலங்களில் இனம் புரியாத நோய் அல்லது தீராத நோய் அல்லது ஆயுள் பயம் அதிகமாக இருக்கும்.
நோய் பரிகாரம் : மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் மரண பயம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும், இறை வழிபாட்டில் நாட்டம் ஏற்படும், தீராத நோய் தீரும்.


ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம்உர்வாருகமிவ பந்தனான் மிருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்அதிர்ஷ்டம் :

நித்திய கண்டம் பூரண ஆயுள் என சிலருக்கு அதிர்ஷ்டக் குறைபாடு மிகுதியாக இருக்கும், பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்சினைகள், நிரந்தர தொழில் மற்றும் வேலை இல்லாத நிலை, வறுமை, குடும்பத்தில் மிகுதியான கூச்சல் குழப்பம் , உழைப்பிற்கு தகுந்த ஊதியமின்மை, தொடர் விரயம், வீட்டில் தங்கம் தங்காத கஷ்டம் நிலவும்.
பரிகாரம் : திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம்: நன்னிலம்குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரரை வழிபட வேண்டும்.சாதாரண பாதிப்பை தரும் எந்த தோ‌ஷத்திற்கும் பரிகாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கால சர்ப்ப தோ‌ஷத்திற்கு தகுந்த ஆலோசனையின்றி சுய பரிகாரம் செய்யக் கூடாது.மேலேயே கூறியது போன்ற குறைபாடு இருப்பவர்கள் நம்பிக்கையுடன் குலதெய்வ வழிபாடு, கருட வழிபாடு செய்து கருட சுலோகங்களை படித்து வர பாதிப்பின் சுவடே தெரியாது.

வாழ்க வளமுடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *