அஸ்வினி நட்சத்திரத்தைப் பற்றிய பொதுவான பலன்கள், குணங்கள் மற்றும் தன்மைகள்

பொதுவான பலன்கள்

  1. தெய்வீக அழகு உடையவர், மெதுவாகவும் ஆழமாகவும் பேசக்கூடியவர்.
  2. எல்லோரும் இவர்களிடம் அன்பாகவும் அந்நியோன்யம் ஆகவும், ஆத்மார்த்தமாகவும் பழகுவார்கள்.
  1. ஆழ்ந்த கருத்துக்கள் ஆனாலும், உயர்வான புத்தி, சிறந்த ஞானத்தால், அனைவரும் கவர்கின்ற நபராக விளங்குவார்கள்.
  2. குதிரை வேகம்(HORSE POWER) என்று சொல்லக் கூடிய சக்தி இவர்களிடம் உண்டு.
  3. அஸ்வினி பெண்கள், முக அழகு ஒளி வீசும், தன்னை அற்புதமாக அலங்கரித்துக் கொள்வார்கள், பார்ப்பதற்கு தெய்வீகக் கலையாக இருக்கும், விரசம் இருக்காது.
  4. இந்த நட்சத்திரத்தில் ருதுவாகும் பெண்கள் ஆசார நோக்கு உடையவர்கள் அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு போன்ற நற்குணங்கள் நிறைந்தவராக இருப்பார். செல்வமும் அனுபவிக்கும் யோகமும் உண்டு.
  5. இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆணும் பெண்ணும் சிறந்த புத்திகூர்மை உடையவர்களாக இருப்பர்.
  6. பொதுவாக இந்த நட்சத்திரக்காரர்கள் மருத்துவம் சார்ந்த தொழிலில், மற்றும் யோகா, தியானம், அரசாங்கம், கடல் சார்ந்த தொழில் அல்லது கடல் சார்ந்த துறை, மருத்துவ ஆராய்ச்சி, கடல் சார்ந்த உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சி, கடற்படை, போன்ற துறைகளில் இவர்களைப் பார்க்கலாம்.
  7. அஸ்வினி பெண் நட்சத்திரக்காரர்களுக்கு, முதல் கரு உருவாகி கலைய வாய்ப்புள்ளது, அல்லது கருக்கலைப்பு, குழந்தை பிறக்கும் போது பாதிப்பு, தாமத குழந்தை, அல்லது குழந்தை சம்பந்தமாக ஒரு சிறு வருத்தங்கள், அல்லது தாய்வழியில் கருக்கலைப்பு இருக்கும்.
  8. இந்த நட்சத்திரக்காரர்கள் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபடுவதால், சில தீய பழக்கத்திற்கு அடிமை ஆகிறார்கள்.
  9. காம உணர்வு சற்று அதிகம்.
  10. இந்த நட்சத்திரக்காரர்களுக்கு கோபம் வந்துவிட்டால் கைநீட்டி அடிப்பார், அது பெற்றோர் இருந்தாலும் சரி.
  11. இந்த நட்சத்திரக்காரர்களுக்கு தலைமுடி சுருள் சுருளாக இருக்கும், தலைமுடி உதிரும்.
  12. தெய்வ நம்பிக்கை ஆன்மீக வழிபாடு ஈர்ப்பு உண்டு, குறிப்பாக சித்தர் வழிபாடு முக்கியத்துவம்.
  13. அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு திரும்பத் திரும்ப செய்கின்ற தொழிலில் சிறப்பான லாபம் ஈட்டித் தரும். (குதிரை போல்)
  14. நிறைய மனக்கவலை இவர்களிடம் உண்டு, தலை ரொம்ப வலிக்கிறது, என் உடம்பு ரொம்ப சூடாக இருக்கிறது, என்று அடிக்கடி சொல்வார்கள்.
  15. அஸ்வினி பெண்கள் எளிதாக ஏமாந்து விடுவார்கள்.
  16. அஸ்வினி நட்சத்திரம் சூரியன் உச்சமாகும் ராசியில் இருப்பதால், நியாயத்துக்கு கட்டுப்படுவார்கள் தர்மசிந்தனை இருக்கும், அடிபணிந்து போக மாட்டார்கள்.
  17. அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தனிமையில் இனிமை காண்பார்கள்.
  18. அஸ்வினி நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால் பெரிய வாகனங்களை இயக்க கூடிய வல்லமை படைத்தவளாக இருப்பாள்.
  19. அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் மருத்துவம் நோய் சம்பந்தப்பட்ட தகவல்கள் அனைத்தும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
  20. அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் அடுத்தவர்கள் ரகசியத்தை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.
  21. அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வேகமாக டேக் ஆஃப்(TAKE OFF), ஆனால் பயணிக்கும் பொழுது ஒரு சில தடைகளை எதிர்கொண்டு அதன்மூலம் தாமதம் ஏற்பட்டு பின்பு அவர் நினைத்த இலக்கை அடைவார்.
  22. வெள்ளை நிற ஆடைகள் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
  23. பொறுமைசாலி சட்டென்று கோபம் வராது, வந்துவிட்டால் வார்த்தை தடித்து விடும்.
  24. அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் விதவைப் பெண்களுக்கு வாழ்க்கை கொடுப்பார்.
  25. ஒரு சிலஅஸ்வினி பெண்களும், திருமணமாகி மனைவியை இழந்த ஆணுக்கு வாழ்வு கொடுக்கும் தியாக சிந்தனை இவர்களிடம் உண்டு.
  26. அஸ்வினி நட்சத்திர பெண்கள், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வார், சுகாதாரத்தில் மிகுந்த அக்கறை காட்டுவார்.
  27. குழந்தைகள் மீது அதிக பாசம் அக்கறை காட்டுவார்கள்,குழந்தைகள் சுத்தம் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்.
  28. இவர்களுக்கு அடிக்கடி முகம், கை, கழுவும் பழக்கம், அல்லது கர்ச்சீப்பால் எடுத்து அடிக்கடி கையையும் முகத்தையும் துடைத்துக் கொள்வார்.
  29. இவர்களிடம் ஒரு தின திட்டம் இருக்கும், அதன்படி முறையாக செயல்படுவார்.
  30. சுக்கிரன் கேதுவின் நட்சத்திரத்தில் அமர்ந்தால், மனைவி மருத்துவம் சார்ந்த பேச்சுக்கள், மற்றும் ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும்.
  31. குடும்பம் ஆனாலும் சரி, நட்பா இருந்தாலும் சரி, தொழிலானாலும் சரி, எடுத்துக்கொண்ட பொறுப்புகளை மிக ஆழ்ந்த அக்கறையுடன் செயல்படுவர்.
  32. இவர்கள் வாழ்க்கையில் எல்லாம் போராடி தடை ஏற்பட்டு பின்பு தான் வெற்றி அடைவர்.
  33. பொது சேவை, பொறுப்புணர்ச்சி, சிறந்த , ஞானம், ஆழ்ந்த சிந்தனை, இளகிய மனசு, இரக்க சுபாவம், தெய்வ நம்பிக்கை, சிறந்த செவிலியர்கள், வேகமும் விவேகமும் நிறைந்த மனிதர்கள்.

குணங்கள்

  • மருத்துவ குணம் உண்டு.
  • எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார்கள்.
  • கடிவாளம் கட்டியது போல் செயலில் குறிக்கோளுடன் இருக்க வேண்டும்.
  • இரட்டைப் பிறவிக் கொண்ட நட்சத்திரம்.
  • தலைமை பொறுப்பிற்கு ஆர்வம்.
  • அரசு அரசியல் ஈடுபாடு உண்டு.
  • அஸ்வினி நட்சத்திரத்தன்று கேள்வி எனில் தொழிலில் பிரச்சனை எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு அந்த குடும்பத்தில் கருக்கலைப்பது தான் காரணம் தடையாக உள்ளது. (இதற்கு பரிகாரமாக மாதமாக இருக்கும் பெண்ணிற்கு ஏதாவது தானம் கொடுக்க வேண்டும்).
  • ஏற்கனவே இருக்கும் விஷயத்தை பற்றியே கேட்பார்கள்.
  • எப்போதும் அவர்கள் வீட்டில் மருந்து இருக்கும்.
  • வீட்டில் ஒரு பகுதி பூசாமல் இருக்கும், வீட்டுக்கு அருகில் செம்மண் இருக்கும்.
  • அவர்கள் வீட்டில் ஏதேனும் ஒரு பகுதியில் செங்கல் தெரிகின்ற மாதிரி வைக்க சொல்ல வேண்டும்.
  • கீழே அமர்ந்து சாப்பிடக்கூடாது.
  • ஐந்தாம் அதிபதி அஸ்வினியில் இருந்தால் முதல் குழந்தை கரு கலையும்.
  • காம்பவுண்ட் வால் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
  • குதிரையின் வேகத்தை கொண்டவர்கள். வேகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
  • கண்ணாடி போடும் சூழ்நிலை உருவாகும்.
  • அஸ்வினியில் வேலை ஆட்களை சேர்க்கக்கூடாது.
  • சிறந்த மேடைப் பேச்சாளர்கள்.
  • மொட்டை அடிக்க சிறந்த நட்சத்திரம்.
  • தங்கம் வெள்ளி வைரம் அதிகம் வாங்கினால் மீண்டும் வாங்கும் வாய்ப்பு உண்டு.
  • அரைஞான் கயிறு பூணூல் கார் பைக் வாங்க சிறந்த நட்சத்திரம்.
  • அஸ்வினி நட்சத்திரத்தன்று தலையில் ஆபரேஷன் செய்யக்கூடாது.
  • சிட்டுக்குருவி கூடு கட்ட ஆரம்பிக்கும் நட்சத்திரம்.
  • இவர்கள் ஆடை அணிகலன்களை அணிவதில் ஆர்வம் உள்ளவர்கள்.
  • சுருள் முடி இருக்கும்.
  • மூதாதையர்கள் பயன்படுத்திய பழமையான பொருட்களை பாதுகாப்பார்கள்.
  • அஸ்வத்தாமன் பிறந்த நட்சத்திரம்.

நட்சத்திர தன்மைகள்

  • பொருள் – முந்திரி
  • இடம் – தலைநகரம்
  • அபிஷேகம் – சந்தன எண்ணெய்
  • அதிர்ஷ்ட மலர் – செவ்வல்லி
  • முக்கிய ஸ்தலம் – சரஸ்வதி கோவில் கூத்தனூர்.
  • மற்ற ஸ்தலங்கள் – ஸ்ரீரங்கம், கொல்லிமலை, திருத்துறைபூண்டி
  • சமித்து – தர்ப்பை
  • பூஜையில் பயன்படுத்த
  • யோகம் தரும் மலர் – சாமந்தி பூ
  • சுவை – புளிப்பு
  • உலோகம் – துருக்கல்
  • ஷேத்திரம் – காளஹஸ்தி
  • தானியம் – கொள்ளு
  • வஸ்திரம் – பல வர்ணம்
  • அங்கம் – கால்கள்
  • உள்அங்கம் – நகங்கள்
  • ஆசன வடிவம் – முச்சில்
  • தங்க ஆபரணம் – ஜடை வில்லை
  • அஸ்வினி ராகம்
    • 1 ம் பாதம் – கனகாங்கி
    • 2 ம் பாதம் – கனகாங்கி, ரத்னாங்கி
    • 3 ம் பாதம் – ரத்னாங்கி
    • 4 ம் பாதம் – கானமூர்த்தி
  • நட்சத்திர அதிதேவதையின் மூலமந்திரம் – ஓம் அஸ்வினி தேவாய நம
குதிரை பூட்டிய ரதம் படத்தை வைத்துக் கொள்ளலாம் அல்லது தானமாக கொடுக்கலாம். கிருஷ்ணர் குதிரை பூட்டிய ரதத்தில் இருக்கின்ற மாதிரி ஒரு பொம்மை வாங்கி வைத்துக் கொள்ளலாம்
  • அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அல்லது ஒரு கிரகம் அஸ்வினியில் நின்று திசை நடத்தினால், சதயம் நட்சத்திரத்தன்று நல்லெண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.
  • சித்திரை மாதம் அல்லது சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் வருவது
  • குதிரை லாடம் தலைவாசலில் கட்டுவது.
  • பேரிச்சம்பழம் சாப்பிடுவது.
  • சதய நட்சத்திர நாளன்று வைத்தீஸ்வரன் கோவில் அல்லது சீர்காழி அல்லது தர்கா சென்று வருவதை இவர்களுக்கு மேன்மை தரும்.

ஒருவர் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் ஒரு கிரகம்
அஸ்வினியில் இருந்து திசை நடத்தினாலும், திருவாதிரை நட்சத்திரம்
வரும் நாளில் நடராஜரையும், கால பைரவரையும் வழிபாடு செய்வது
அந்த கிரகம் எப்படி இருந்தாலும் நல்லதாக வேலை செய்யும். மணி தானம் செய்வது (சித்தர்கள் கண்டுப்பிடித்த சூட்சமான விஷயம் இதுதான்), நாய்களுக்கு உணவு கொடுப்பது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *