மிருகசீரிஷம் நட்சத்திரம் – mrigasirisa nakshatra

செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் துணிச்சல் மிக்கவர்கள். தேசப்பற்று உள்ளவர்களாக இருப்பீர்கள். எதையும் முழுமையாக நம்புவீர்கள். உங்களிடம் மன உறுதி அதிகம் காணப்படும். சுறுசுறுப்பானவர்கள். எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டேயிருப்பீர்கள். பெற்றோரிடம் பாசம் கொண்டவர்கள். கற்பனை வளம் நிறைந்திருப்பதால் அடிக்கடி கனவுலகத்தில் மூழ்கிவிடுவீர்கள். நீங்கள் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர். எதையும் ஆராயும் நோக்கம் உங்களிடம் அதிகம் இருக்கும். அன்மீகம், உளவியல் மற்றும் உணர்ச்சிகளை குறித்து மேலும் அறியும் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். அறிவு மற்றும் அனுபவத்தை பெறுவதே உங்கள் நோக்கமாக இருக்கும். கூர்மையான புத்தியும் எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறனும் கொண்டிருப்பீர்கள். தன்மையான , அடக்கமான, குதூகலாமான, நட்பான கலகலப்பான குணம் கொண்டவர் நீங்கள். உங்களது மூளையும் மனதும் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும். உங்களுக்குத் தோன்றுவதையே செய்வீர்கள். சவால்களை துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். பெரியவர்களுக்கு மரியாதை அளிப்பீர்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் அதிகம். யார் சொல்லுக்கும் கட்டுப்படாதவர்கள். சுயசிந்தனையோடு தன்னிச்சையாக, எடுத்த காரியத்தை முடிக்கும் தைரியமும் உங்களுக்கு உண்டு. அதேசமயம் மற்றவர்களுக்கு மதிப்பு அளிப்பீர்கள்.

கல்வி

கல்வியில் அவ்வளவாக ஆர்வமிருக்காது என்றாலும், பொது அறிவை வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்வியில் தடை ஏற்படக்கூடும். அபார நினைவாற்றல் இருக்கும். கல்வியைக் காட்டிலும் மற்றவற்றில் நாட்டம் அதிகமிருக்கும். சிறு வயதிலேயே ராகு திசை வருவதால், கல்வி தடைப்படும். அல்லது இளங்கலைப் பட்டம் ஒரு பாடப் பிரிவில் பெற்று முதுகலை, மற்றொரு பாடப் பிரிவில் பெற நேரிடும். கணக்கு, நிதித்துறை, கம்யூட்டர் தாவரவியல், விலங்கியல், அரசியல், பொது மேலாண்மை, சட்டம் போன்ற துறைகள் ஒன்றில் புகழ் பெறுவார்கள்.

தொழில்

அறிவாற்றலால் அரசாங்கத்திலும், பெரிய நிறுவனங்களிலும் ஆலோசகராக பணிபுரிவார்கள். ஆன்மீகப் பணிகளிலும், அறப்பணிகளிலும் ஆர்வம் உள்ளவர்கள். கற்பனை வளம் மிகுந்தவர்களாகவும் கவிதை, கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர்களாகவும் இருப்பார்கள். எந்த உத்தியோகத்தில் இருந்தாலும் நெறி முறை தவறாதிருப்பார்கள். ஒரு சிறந்த பாடகராக, இசை கலைஞராக, ஆர்டிஸ்டாக, கவிஞராக, மொழி விற்பன்னராக, நாவலாசிரிரியராக, எழுத்தாளராக அல்லது சிந்தனையாளராக இருக்க கூடும். வீடு, ரோடு, மேம்பாலம் கட்டுமானம்,கருவிகள் செய்தல், டெக்ஸ்டைல் அல்லது ஆடை தொழிற்சாலை, ஆராய்சி தொடர்பான பிரிவுகள்; இயற்பியல். வான சாஸ்திரம். சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் ஆகியவை லாபம் தரும்.

குடும்பம்

உயர்ந்த பண்பும் தாய், தந்தையிடம் அதிக பாசமும் இருக்கும். குடும்ப எதிர்காலத்திற்காக கடுமையாக உழைப்பீர்கள். எந்த விஷயத்தையும் கிரகிப்பதில் கில்லாடிகள். எங்கிருந்தாலும் தனித்தன்மையோடு முதன்மை ஸ்தானத்தைப் பெறுவீர்கள். நல்ல வசதியான இடத்தில் வாழ்க்கைத்துணை அமையும். ஆடம்பரமான வாழ்க்கையைப் பெற்றிருப்பீர்கள். சோதனைகள் அடுக்கடுக்காக வந்தாலும் கூட அதை அநாயசமாக கடந்துவிடுவீர்கள். விட்டுக் கொடுக்கும் குணத்தால் பெரிய நண்பர்கள் வட்டத்தைப் பெற்றிருப்பீர்கள் நீங்கள் விரும்பியபடியே திருமணம் நடைபெறும். பிள்ளைகளிடம் அதிகப் பாசம்கொண்டிருப்பீர்கள். அவர்கள் வளர்ச்சியில் அதிக அக்கறை வைத்திருப்பீர்கள். அவர்களுக்காக சொத்துகளைச் சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைப்பீர்கள். மற்றவர்களைக் கவரும் வகையில் பேசுவீர்கள். வெளிநபர்களிடம் விட்டுக்கொடுக்கும் அளவுக்கு வீட்டில் மனைவி, மக்களிடம் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். வீட்டில் கறாராக நடந்துகொள்வீர்கள். இதனால் கணவன் மனைவி ஒற்றுமை மற்றும் குடும்ப ஒற்றுமை குறைவாக இருக்கும். மனைவி வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார்.

ஆரோக்கியம்

உங்கள் நட்சத்திரம் செவ்வாயின் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு , ரத்தம் குறைவு, கை கால்கள் சோர்வு, நெஞ்சு வலி, கண் நோய், தூக்கம் இன்மை, வயிற்று வலி, பால்வினை நோய் போன்றவை வரக்கூடும்.வயிற்றுவலி, குடல் ஏற்ற இறக்கம், நீரிழிவு, வாதம் போன்ற நோய்கள் வந்து, நீங்கிவிடும். நீண்டகாலம் வாழ்வீர்கள்.

மிருகசீரிடம் நட்சத்திர குணங்கள்
27 நட்சத்திரங்கள் வரிசையில் 5வதாக வருகின்ற நட்சத்திரம் மிருகசீரிடம். இதன் அதிபதி செவ்வாய் பகவான். இரண்டு ராசிகளில் இடம்பெறுகின்ற நட்சத்திரம் இது. முதல் இரண்டு பாதங்கள் ரிஷப ராசியிலும், அடுத்த இரண்டு பாதங்கள் மிதுன ராசியிலும் இடம்பெறுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துணிச்சல்காரர்களாக இருப்பார்கள். தேசப்பற்றுக் கொண்டவர்கள்.

பொதுவான குணங்கள்

எதிலும் முழுமையான நம்பிக்கைக் கொண்டிருப்பார்கள். மன உறுதி நிறைந்தவர்கள். வலிமையான உடற்கட்டைப் பெற்றிருப்பார்கள். சுறுசுறுப்பானவர்கள். எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டேயிருப்பார்கள். பெற்றோரிடம் பாசம் கொண்டவர்கள். கற்பனை வளம் நிறைந்திருப்பதால் அடிக்கடி கனவுலகத்தில் மூழ்கிவிடுவார்கள்.

தனக்கு என்ன தோன்றுகிறதோ அதையேச் செய்வார்கள். எந்த சவால்கள் வந்தாலும் எடுத்த காரியத்தை துணிச்சலாக எதிர்கொண்டு முடிப்பார்கள். பெரியோர்களை மதித்து நடப்பார்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். விருப்பப்படி வாழ்க்கைத்துணை அமையும்.

குடும்ப எதிர்காலத்திற்காக கடுமையாக உழைப்பார்கள். எந்த விஷயத்தையும் கிரகிப்பதில் கில்லாடிகள். எங்கிருந்தாலும் தனித்தன்மையோடு முதன்மை ஸ்தானத்தைப் பெறுவார்கள். நல்ல வசதியான இடத்தில் வாழ்க்கைத்துணை அமையும். ஆடம்பரமான வாழ்க்கையைப் பெற்றிருப்பார்கள். சோதனைகள் அடுக்கடுக்காக வந்தாலும் கூட அதை அநாயசமாக கடந்துவிடுவார்கள். விட்டுக் கொடுக்கும் குணத்தால் பெரிய நண்பர்கள் வட்டத்தைப் பெற்றிருப்பார்கள்.

மிருகசீரிடம் முதல் பாதம்
இதன் அதிபதி சூரியன் பகவான்.
துணிச்சல்மிக்கவர்கள் என்பதால் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள். நினைத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். போராட்ட குணமிக்கவர்கள். தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டவர்கள். சொந்தமாக தொழில் செய்வதையே விரும்புவார்கள். பழமையை நேசிப்பதுடன் புதுமையையும் வரவேற்பார்கள். தங்களது வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதை அவர்களே தீர்மானித்து கட்டமைத்துக் கொள்வார்கள்.

மிருகசீரிடம் இரண்டாம் பாதம்
இரண்டாம் பாதத்தை ஆட்சி செய்பவர் புதன் பகவான்.
இதில் பிறந்தவர்கள் மிகுந்த இரக்க சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள். சொந்த முயற்சியால் முன்னேற்றத்தை அடைவார்கள். எந்த நெருக்கடி வந்தாலும் உண்மைக்கு புறம்பாக பேசமாட்டார்கள். தன்மானச் சிங்கங்களாக வாழ்வார்கள். அறிவாற்றலால் அரசாங்கத்திலும், பெரிய நிறுவனங்களிலும் ஆலோசகராக பணிபுரிவார்கள். ஆன்மீகப் பணிகளிலும், அறப்பணிகளிலும் ஆர்வம் உள்ளவர்கள்.

மிருகசீரிடம் மூன்றாம் பாதம்
இதன் அதிபதி சுக்கிரன் பகவான். இதில் பிறந்தவர்கள் அழகான தோற்றத்துடன் காணப்படுவார்கள்.
வாழ்க்கையை இயல்பாக எடுத்துக் கொள்வார்கள். கிடைத்ததை வைத்து நிறைவான வாழ்க்கையை வாழ்பவர்கள். தீவிர ஆன்மீகவாதிகளாக இருப்பார்கள். எந்த சூழலிலும் கலங்காத தைரியத்தைப் பெற்றிருப்பார்கள். மனைவி, குழந்தைகளை மிகவும நேசிப்பார்கள். பொதுநலன்களில் ஈடுபாடு காட்டுவார்கள்.

மிருகசீரிடம் நான்காம் பாதம்
நான்காம் பாதத்தை ஆட்சி செய்வது செவ்வாய் பகவான்.
இந்த பாதத்தில் பிறந்தவர்கள் உண்மையே பேசுவார்கள். தவறுகளை சுட்டிக் காட்ட தயங்கமாட்டார்கள். சிறிய வயதிலேயே பல ஏமாற்றங்களைக் காண்பார்கள். ஆனாலும் அதைக் கண்டு அஞ்சமாட்டார்கள். நகைச்சுவை உணர்விமிக்கவர்கள். வாதத்திறமை உள்ளவர்கள். எதையும் சமார்த்தியமாக எதிர்கொள்வார்கள். பணி செய்யும் இடத்தில் நேர்மையுடன் செயல்படுவார்கள். அதனால் மற்றவர்கள் மதிப்புக்கு ஆளாவார்கள்.

மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்
திருவாரூர் மாவட்டம், எண்கண் என்ற ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு ஆதிநாராயணப் பெருமாள் திருக்கோயில். தாயார் ஸ்ரீதேவி, பூதேவி. தங்களது தோஷங்கள் அகல மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் இத்தல இறைவனை வழிபடுகின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டுவோர், திருமணத்தடை உள்ளவர்கள், நாக தோஷம், பட்சி தோஷம் உள்ளவர்கள், தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர வேண்டுவோர், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மரண சம்பவங்களால் அடிக்கடி பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் தொந்தரவுகள் நீங்க பௌர்ணமி மற்றும் மிருகசீரிட நட்சத்திர நாட்களில் இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். படிப்புக்கேற்ற வேலை கிடைக்காதவர்கள் இத்தலம் வந்து புதன், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து வழிபட்டால் சிறந்த பலன்களைப் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *