பூராடம் நட்சத்திரம்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுடைய கனிவான பார்வையாலும், இனிமையான பேச்சாலும் அனைவரையும் தன் வசப்படுத்தி வைத்திருப்பார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் அதை எளிதாக கிரகிக்கும் ஆற்றல் உள்ளவர்கள். தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகத் திகழ்வார்கள். எந்த ஒரு காரியத்திலும் அவசரத்தில் முடிவெடுத்துவிட்டு அப்புறம் அதிலிருந்து மீள்வார்கள். எந்த காரியமானாலும் ரிஸ்க் எடுக்கத் தயங்கமாட்டார்கள். தடைகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள். தங்களுக்கான சரியான நேரம் வரும் வரை காத்திருந்து காரியம் சாதிப்பார்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதை விரும்புவார்கள். எந்த காரியம் என்றாலும் உடனடி முடிவெடுப்பார்கள். பேச்சாற்றல்மிக்கவர்கள். எவருடனும் தூய்மையான மனதுடன் நேர்மையாகப் பழகுவார்கள். நட்புக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். பொய் பேசுவதை விரும்பமாட்டார்கள். உண்மையே உயர்வு என்பதை அறிந்தவர்கள். அமைதியும், அடக்கமும் நிறைந்தவர்கள். பூராடம் நட்சத்திரத்தின் அதிபதின் சுக்கிர பகவான் என்பதால் வாசனைத் திரவியங்கள், ஆடம்பர ஆடை, ஆபணரங்களில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். எல்லோரிடமும் சரிசமமாகப் பழகும் தன்மையுள்ளவர்கள்.

கல்வி

இந்த நட்சத்திரக்காரர்கள் சிறு வயதில் கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள். இருந்தாலும் போகப் போக சரியாகிவிடும். பல்வேறு கலைகளில் ஆர்வம் காட்டுவார்கள். இலக்கியத்துறையில் சிறந்த ஞானத்தைப் பெற்றிருப்பார்கள். அதில் பல விஷயங்களை தெரிந்து வைத்திருப்பார்கள்.

தொழில்

கணக்கு, வணிகவியல், பொது மேலாண்மை, துப்பறிதல், நீதி, மக்கள் தொடர்பு, பேஷன் டெக்னாலஜி, தொலைத் தொடர்பு, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் சம்பாதிக்கும் யோகம் பெற்றவர்கள். அயல்நாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் யோகமும் வரும். கப்பல் படை அதிகாரி, உயிரியலாளர், விவசாயம், தொழில், டான்சர், ஸ்டேஜ் பெர்பார்மர், பாடகர், சைக்கலாஜிஸ்ட், தத்துவவாதி, கவிஞர், எழுத்தாளர், ஓவியர், ஃபேஷன் டிசைனர், ஹோட்டல் தொடர்பான துறைகளில் சாதிப்பார்கள்.

குடும்பம்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சரியான ஜாதகப் பொருத்தம் பார்த்து மணமுடிப்பது நல்லது. சிலருக்கு மறுமண அமைப்பு இருக்கும். பிள்ளைகளின் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். தாய் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். அமைதியை அதிகம் விரும்புவதால் இயற்கை விரும்பிகளாக இருப்பார்கள். அனைவரையும் நம்புவார்கள். அனுபவத்திற்கு பிறகு சரியாக விடும்.

ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மூச்சு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அலட்சியம் வேண்டாம். தைராய்டு, சிறுநீரகக் கல், வயிற்றுப் புண், கீல் மூட்டு வாதம், சர்க்கரை வியாதி ஆகியவை உண்டாகும். ஜீரணக் கோளாறு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும்.

பூராடம் நட்சத்திர குணங்கள்
பூராடம் நட்சத்திரத்தின் ராசி தனுசு. நட்சத்திரத்தின் அதிபதியாக சுக்கிரன் உள்ளார். இராசி அதிபதி குரு. பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த நிர்வாகியாக இருப்பார்கள். நல்ல புத்திசாலியாகவும் இருப்பார்கள். உயர்ந்த பதவியில் பணிபுரிவார்கள். சமார்த்தியசாலிகள், எதையும் கூர்ந்து கவனித்து முடிவெடுக்கும் குணம் படைத்தவர்கள். பரந்த மனம் உடையவர்களாகவும், பொய் சொல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.

பொதுவான குணங்கள்

தர்ம சிந்தனை கொண்டவர்கள். பொறுமையாக இருந்து காரியத்தை சாதிப்பார்கள். சுக போகங்களை விரும்புவார்கள். முடிவுகள் எடுப்பதில் வல்லவர்களாக திகழ்வார்கள். வாக்குவாதங்களில் ஈடுபடுவார்கள். தாய்க்கு விருப்பமானவர்களாகவும், தன்னை சேர்ந்தவர்களை பேணிக்காப்பவர்களாக விளங்குவார்கள். பயணங்களில் விருப்பம் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

பூராடம் முதல் பாதம்
பூராடம் முதல் பாதம் அதிபதி சூரியன். அதீத தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள். பலசாலிகளாகவும், சண்டைப் பிரியர்களாகவும் இருப்பார்கள். எந்தச் செயலையும் குறையின்றி, தவறின்றி நேர்த்தியாக செய்து முடிப்பார்கள். கடுமையான உழைப்பாளிகளாகத் திகழ்வார்கள். எனினும் இவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காது.

பூராடம் இரண்டாம் பாதம்
பூராடம் இரண்டாம் பாதத்தின் அதிபதி புதன். இனிமையான பேச்சு, கவர்ச்சியான தோற்றம் உடையவர்கள். ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்கள். இரக்கக் குணமும், உதவும் குணமும் கொண்டவர்கள். சகல சௌபாக்கியங்களையும் பெற்றிருப்பார்கள்.

பூராடம் மூன்றாம் பாதம்
பூராடம் மூன்றாம் பாதத்தில் அதிபதி சுக்கிரன். ஒழுக்கம், நேர்மை, முன்ஜாக்கிரதையாக நடந்து கொள்வார்கள். தான் விரும்பியதை அடைந்தே தீருவது என்ற குணம் படைத்தவர்கள். தெளிவான சிந்தனை உடையவர்கள். உடல் பலகீனமாக இருப்பார்கள். எதிர்மறையான சிந்தனைகள் மிகும் போது இவர்களது தன்னம்பிக்கை குறையும்.

பூராடம் நான்காம் பாதம்
நான்காம் பாதத்தின் அதிபதி செவ்வாய். தலைமை பண்பு மிகுந்தவர்களாக இருப்பார்கள். கோபமும், ஆவேசமும் அதிகமாக இருக்கும். தங்களது காரியத்தை சாதிப்பதற்காக எதையும் செய்யக்கூடியவர்கள். பெரியோர்களின் உபதேசங்கள் விரும்பமாட்டார்கள். தேக வலிமை உடையவர்கள். பிறரை அடக்கி ஆள நினைப்பவர்கள்.

பூராடம் நட்சத்திரக்காரர்களின் கோயில்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுக்கா, கடுவெளியில் அமைந்துள்ளது அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில். பூராடம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீக்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத் தடை உள்ளவர்கள் தங்கள் நட்சத்திர நாளில் சுவாமி சன்னதியில் சாம்பிராணி புகையிட்டு வழிபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *