பூரம் நட்சத்திரத்தைப் பற்றிய பொதுவான பலன்கள், குணங்கள் தன்மைகள் மற்றும் பரிகாரம்

பொதுவான பலன்கள்

 • ஆண்டாள் பிறந்த நட்சத்திரம், பார்வதி தேவி அவதாரம் செய்த நட்சத்திரம்
 • .மிகவும் சகஜமாக பேசுவார்கள். உதட்டில் புன்னகை எப்பொழுதும் இருக்கும்.
 • நன்றாக அலங்கரித்துக்கொண்டு, சிறப்புமிகு ஒரு வெளிப்பாட்டில் இருப்பார்.
 • தந்தை மீது அதிக பாசம், இந்த நட்சத்திரக்காரர்களின் இளமைக்கால வாழ்க்கையை மிகவும் சிறப்பாக இருக்கும்.
 • இந்த நட்சத்திரக்காரர்களின் தந்தை இவர்களை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்வார்.
 • இந்த நட்சத்திரகாரர்களின் கண்கள் மற்றும் முகம் வட்ட வடிவமாக இருக்கும், ஒரு முறை பார்த்தால் திரும்பிப் பார்க்கத் தோணும்.
 • பூர நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளை, எல்லோரும் வாரி அணைத்துக் கொள்வார்கள்.
 • இவர்கள் உடம்பை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வார்கள். வாசனை திரவியம் பூசிக் கொள்வார்கள்.
 • வைராக்கியம் நிறைந்த மனிதர்களாக இருப்பார்கள்.
 • சிரித்து சிறப்பாக பேசி தன் காரியத்தை சாதித்துக் கொள்வதில் வல்லவர்கள்.
 • விருந்தோம்பல், சுவையான உணவு, எல்லோரிடம் சேர்ந்து சாப்பிடும் பழக்கம், சாப்பிடும் பொழுது பேசிக்கொண்டே சாப்பிடுவது, அல்லது புத்தகத்தைப் படித்துக் கொண்டே சாப்பிடுவது, அல்லது டிவி நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டே சாப்பிடுவது, போன்ற பழக்கங்களை இவர்களிடம் பார்க்கலாம்.
 • சிரிப்பு படங்கள், கலை நிகழ்ச்சிகள், ஃபேஷன் ஷோ, மனதிற்கு மென்மையான பாடல் இசை, தனக்குப் பிடித்த பாட்டு பாடிக் கொண்டே இருப்பது, குளிக்கும் பொழுது பாடுவது, ரங்கோலி கோலம் போடுவது, ஜாக்கெட்டுக்கு விதவிதமான ஜிமிக்கி ஒர்க் செய்வது, புருவத்தை சீராக வைத்துக் கொள்வது, தலைமுடியை லூஸ் ஹேர் ஆக வைத்துக் கொள்வது, பூங்கொத்து விரும்பி வாங்குவது, அல்லது பரிசளிப்பது, நெயில் பாலிஷ் போடுவது, மெஹந்தி மருதாணி இட்டுக் கொள்வது, போன்ற விஷயங்களில் ஈடுபாடு அதிகமாக இருக்கும்.
 • பிறர் இவர்களிடம் குறைகளைக் கூறும் பொழுது, குறிப்பாக பெண்களிடம் கூறும்பொழுது, இவர்கள் ஆறுதலான பேச்சும், கொடுக்கும் மன தைரியமும் ஆறுதலும் தேனாக தித்திக்கும்.
 • இந்த நட்சத்திர காரர்களை பார்க்கும்பொழுது பேசும்பொழுது, அவர்கள் இவ்வாறு சொல்வார்கள், ஏதாவது சாப்பிட்டே பேசலாமா???,எங்காவது உட்கார்ந்து ஜூஸ் குடித்து கொண்டே பேசலாமா, ஏய் பாரு இவன் கார் எவ்வளவு அழகாக இருக்கிறது, என்ன சூப்பரா டிரஸ் போட்டுட்டு வரான் பாரு, சூப்பர் செண்ட் போட்டு இருக்கான் பா, வாசனை தூக்குது, இந்த மாதிரியான வார்த்தைகள் அதிகமாக வெளிப்படுத்துவார்கள். அதாவது சுற்றியுள்ள சூழ்நிலையை ரசிக்கும் தன்மை இவர்களிடம் அதிகமாக இருக்கும்.
 • இந்த நட்சத்திர பெண்கள் சுகத்தையும், சுக போகத்தையும், தன் கணவருக்கு வஞ்சனையின்றி அள்ளிக் கொடுக்கும் தன்மை உண்டு.
 • மிகவும் ஒரு சோகமான கட்டத்தில் கூட,துக்கங்களையும் வேதனையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், உதட்டில் அந்த புன்னகையை வைத்துக் கொண்டு, அழகாக பேசுவார்கள்.
 • மிகவும் அன்னியோன்யமாக உள்ளார்ந்து பழகும் நண்பர்களிடம், தன் மனதில் உள்ள கவலை எதிர்பார்ப்பு சோகம், மிகவும் எளிமையாக பதட்டமில்லாமல், அவர்கள் கையை பிடித்துக்கொண்டு கண்ணை பார்த்து கொண்டு நிதானமாக பேசுவார்கள். அவர்கள் அறியாமல் கண்ணில் நீர் வரும் பொழுது, உடனே துடைத்துக்கொண்டே சகஜ நிலைக்கு வந்துவிடுவார்கள்.
 • பூரம் நட்சத்திரக்காரர்கள் காதலை மிக அற்புதமாக வெளிப்படுத்துவார்.அந்தக் காதலை வெளிப்படுத்தும் சூழ்நிலையும் வெளிப்படுத்தும் விதமும் பேசப்படக்கூடிய வார்த்தைகள் மிக அற்புதமாக இருக்கும்.
 • பூர நட்சத்திர தாய்மார்கள், தன் குழந்தைகளை சிறப்பாக அலங்கரித்து பார்ப்பதில் அவ்வளவு ஆனந்தம். குழந்தைகளை விதவிதமான மாறுவேடப் போட்டிக்கு தயார் செய்வார்கள்.
 • பூர நட்சத்திர காரர்களின் உடல்வாகு மிகவும் சிறப்பாக இருக்கும்,அதனால் இவர்கள் ஆடை அணியும் பொழுது பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.
 • பூர நட்சத்திரத்தில் பிறந்த ஒரு சில பேருக்கு, திருமண வாழ்க்கை இவர்கள் எதிர்பார்க்கின்ற அளவிற்கு இருப்பதில்லை.
 • இனிப்பு, காரம், எது வாங்குவதாக இருந்தாலும், சுவை(TASTE) பார்க்காமல் வாங்க மாட்டார்கள்.
 • பொழுதுபோக்கு படம் பார்ப்பது, MALL சுற்றிப் பார்ப்பது, சுற்றுலா செல்வது, இயற்கையை ரசிப்பது, போன்றவை பிடிக்கும்.
 • சில பேர் பார்ப்பதற்கு குண்டாக இருந்தாலும் அழகாக இருப்பார்கள்.
 • இவர்கள் சுதந்திரமாக செயல்படுவதை விரும்புவார்கள்.
 • இந்த நட்சத்திரக்காரர்கள் மற்றவர்களுடைய தேவைகள் என்ன என்பதை சரியாக புரிந்துகொள்வார்கள், அதற்கு ஏற்றால் போல் செயல்படுவார்கள்.
 • பூரம் நட்சத்திரக்காரர்கள் உடைய மூக்கு சற்று நீளமாக இருக்கும்.
 • செய் நன்றி மறவாதவர்கள், இந்த பூரம் நட்சத்திரக்காரர்கள்.
 • இந்த நட்சத்திரக்காரர்களுக்கு இவர்களுடைய செயல்திறன் தான் மிகவும் முக்கியம்., அதில் கவனம் அதிகமாக இருக்கும்.
 • குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் நிறைய தியாகங்களை செய்வார்.
 • ரசனையும் ரசிப்புத் தன்மையும் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.
 • திருப்பதி வெங்கடாஜலபதி ஐயும் தாயாரையும் அதிகமாக வணங்குவார்கள்.
 • சிறந்த அழகு, அழகான பல் வரிசை, செவ்விதழ் உதடு, கூர்மையான மூக்கு, வட்ட வடிவமான முகம், அதில் சூரியனைப் போல் ஒரு ஒளி பிரகாசம், நேர்த்தியான ஆடை, ஈர்ப்பு இருக்கும் ஆனால் விரசம் இருக்காது, சிறந்த ஒரு வாசனை திரவிய துடன், தேர்பவனி வருவா வருவதுபோல், அழகாக பவனி வருவார்கள். இந்த நட்சத்திர பெண்ணை மணக்கும் ஆண்கள், ஆணை மணக்கும் பெண் கொடுத்து வைத்தவர்கள்.

     தன்மைகள்

     • அதிதேவதை – ஆண்டாள்
     • தேவதை – பார்வதி அரியமான்
     • மிருகம் – பெண் எலி
     • யந்திரம் – சுதர்சன யந்திரம்
     • அபிஷேகம் – நெய்
     • மலர் – வெண்தாமரை
     • முக்கியஸ்தலம் – தலைசங்காடு தெட்சணபுரீஸ்வரர் கோயில்
     • மற்ற ஸ்தலங்கள் – நாலூர், கஞ்சனூர், திருவரங்குளம்
     • சமித்து – அத்தி
     • தான பொருட்கள் – பலாப்பழ இனிப்பு சாதம்
     • அமைவிடம் – ஊர்நடு
     • பூஜையில் பயன்படுத்த யோகம் தரும் மலர் – தாமரைப்பூ
     • தானியம் – மொச்சை
     • உலோகம் – வெள்ளி
     • சேத்திரம் – திருமணஞ்சேரி
     • ஆசன வடிவம் – ஐங்கோணம்
     • அங்கம் – பிறப்புறுப்பு, வலது கரம்
     • உள்பாகம் – இந்திரியம்
     • தங்க ஆபரணம் – மோதிரம்
     • நட்சத்திர அதிதேவதை மூலமந்திரம் – ஓம் ஆம் அர்ய மாய நம
     • சுவை – இனிப்பு
     • பொருள் – எலுமிச்சை
     • அபிஷேகம் – பார்வதிக்கு பசும் தயிர்

     பூரம் ராகம்

     • 1 ம் பாதம் – சரசாங்கி, ஹரிகாம்போதி
     • 2 ம் பாதம் – ஹரிகாம்போதி
     • 3 ம் பாதம் – தீர சங்கராபரணம்
     • 4 ம் பாதம் – தீர சங்கராபரணம், நாகநந்தினி

     பூர நட்சத்திர உருவங்கள்

     கட்டில், கட்டிலின் பெரிய பின்னங்கால், நான்கு பக்க சுவர், பங்களா, வீடு, பார்வதி படம், நாற்காலி மேஜை வீட்டின் உள் தூண்கள் எலி வாகனம் பெருச்சாளி பேப்பர் விசிட்டிங் கார்டு அடையாள அட்டைகள் ஸ்டாம்ப் படுக்கை விரிப்புகள் புத்தகங்கள் நோட்டுகள் உலகின் சதுர வடிவங்கள் யாவும் பூரம், பூமத்திய ரேகை பூரம், வானவேடிக்கை, பலூன், பூணூல் பூரம், வேஷ்டி பூரம், வளையல்

     குணங்கள்

     • கிடைக்காத காரியம் என்னும் தெரிந்த விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் பூர நட்சத்திர நாளில் தொடங்கினால் வெற்றியில் முடியும்
     • பூர நட்சத்திரத்தில் எந்த காரக கிரகம் இருக்கிறதோ அந்தக் காரக உறவு வீடு வாங்குவார்
     • தான் விரும்பிய கணவரை அடைய பெண்கள் பூர நட்சத்திரம் அன்று வழிபாடு செய்ய வேண்டும்
     • வெள்ளி நகைகளை அணிய வேண்டும் அல்லது வெள்ளி பாத்திரத்தில் சாப்பிட வேண்டும்
     • தலையில் தொப்பி வைப்பது சிறப்பு
     • ஆண்கள் இனிமையாக பேசக் கூடியவர் பூர நட்சத்திர பெண்கள் எப்போதும் சிரித்த வண்ணம் பேசக்கூடியவர் ஆனால் உக்கரம் பெற்றால் ருத்ர தாண்டவம்
     • இவர்கள் வீட்டில் வட கிழக்கு மூலையில் வாஸ்து தோஷம் இருக்கும்

     பரிகாரம்

     • புல்லாங்குழல் வைத்துக் கொள்வது
     • அயோத்தி சென்று வருவது
     • ராமருக்கு சக்கரை பொங்கல் நெய்வேத்தியமாக படைப்பது
     • திருவெற்றியூர் பம்புடையநாதர் தரிசனம்
     • புணர்பூசம் அன்று கொய்யாப்பழம் சாப்பிடுவது

     Leave a Reply

     Your email address will not be published. Required fields are marked *