நட்சத்திரம் natchaththiram

ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமானது நட்சத்திரம். கிரங்களை விடவும் நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம் என கூறப்படுகிறது. ஒருவருடைய ஜாதகம் அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தான் அமைகிறது. ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளாரோ, அந்த நட்சத்திரம் எந்த ராசிக்கு உரியதோ அதுவே அவரது ஜென்ம ராசியாகும். ராசிகள் மொத்தம் 12 உள்ளன. மொத்த நட்சத்திரம் 27 ஆகும். ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு 1,2,3,4 பாதங்கள் என குறிப்பிடப்படுகின்றன.

பாதம் என்றால் என்ன?
ஒரு நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகளை பிரிப்பதே பாதம் என்று சொல்லப்படுகிறது. நட்சத்திர ஒளிக்கற்றைகளை நான்கு பாதங்களாக பிரிக்கிறார்கள். அதனால் தான் 4 பாதங்கள் என்று கூறப்படுகிறது. அதே போல் நாழிகை தான் அதிகளவில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதாவது தோரயமாக ஒரு நட்சத்திரம் என்றால் 60 நாழிகைகள் இருப்பதாக எடுத்துக் கொண்டேமானால் அதை நான்காக பிரிக்கும் பொது ஒரு நட்சத்திரத்தின் ஒரு பாதம் என்பது முதல் 15 நாழிகைகள் ஆகும். அடுத்த 15 நாழிகைகள் அதே நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் என அழைக்கப்படுகிறது. இதே போன்று அதே நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம், நான்காம் பாதம் அடுத்தடுத்த 15 நாழிகைகளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அஸ்வினி நட்சத்திரம்

நட்சத்திரங்கள் வரிசையில் முதலாவது நட்சத்திரமாக வரும் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல சுறுசுறுப்பும், துடிப்புடன் செயல்படும் குணத்தைப் பெற்றிருப்பவர்கள். மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்ற தீராத தாகம் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த காரியத்தையும் வேகத்துடனும், சுறுசுறுப்புடனும் உடனே முடித்து விடுவார்கள். எதிலும் ஆர்வமாக செயல்படுவார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் எளிதாக புரிந்து கொண்டு முடிவுகளை உடனுக்குடன் எடுப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். எதிரிகளை சமாளிப்பதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். தைரியத்தையும், துணிச்சலையும் கைவரப் பெற்றவர்கள். எதையும் ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுப்பார்கள். எந்த கடினமான சூழலிலும் பொறுமையையும், தெய்வ பக்தியையும் கைவிடமாட்டார்கள். பாரம்பரியமான விஷயங்களை விரும்புவராக இருந்தாலும் கூட நவீனத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள்.

கல்வி
கல்வி

மிகச்சிறந்த உயர் கல்வி கற்கும் யோகத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள். எந்தத் துறையாக இருந்தாலும் அதில் ஞானம் பெற்றிருப்பார்கள். கலையில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். கணிதம், வானவியல், ஜோதிடம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். அமானுஷ்யம், சமயம் மற்றும் மந்திர தந்திரங்களில் ஆர்வம் உள்ளவாகவும் இருப்பார்கள்.

தொழில்
தொழில்

எந்த தொழில் செய்தாலும் அதில் நேர்மையையும், கண்ணியத்தையும் கடைப்பிடிப்பார்கள். வானியல், வங்கி, மருத்துவம், ரசாயனம், மருந்து, மின்சாரம், ரியல் எஸ்டேட், கட்டிடக்கலை போன்ற துறைகளில் ஈடுபடக் கூடியவர்கள். ஜோதிடத்திலும், விஞ்ஞானத்திலும் ஆர்வம் உள்ளவர்களாக விளங்குவார்கள்.

குடும்பம்
குடும்பம்

குடும்ப வாழ்வைப் பொறுத்த வரை காதலிக்கின்ற யோகம் இருந்தாலும் கூட, சுக்கிரன் பலமாக இருந்தால் மட்டுமே காதல் திருமணம் அமையும். இல்லையென்றால் பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணம் கைகூடும். வாழ்க்கைத் துணைவியிடமும், பிள்ளைகளிடமும் பாசமாக இருப்பார்கள். அவர்கள் தன்னைப் போலவே நீதி, நேர்மை தவறாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள்.

ஆரோக்கியம்
ஆரோக்கியம்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவாகவே சாதாரணமான நோய்களே வருவதால், எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடன் விளங்குவார்கள். நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பார்கள்.

அசுவினி நட்சத்திர குணங்கள்
27 நட்சத்திரங்களின் வரிசையில் முதலாவதாக வரும் நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவானாவார். நட்சத்திரத்தின் தேவதைகள் குதிரை முகம் கொண்ட அஸ்வினி தேவர்கள் ஆவர். தேவ மருத்துவர்களாக கருதப்படும் அஸ்வினி தேவர்கள், எப்படிப்பட்ட உடல் ஆரோக்கிய குறைபாடு உள்ள மனிதர்களையும் குணபடுத்தி அவர்களின் குறைகளை நீக்குவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். அவர்களை வழிபடுவதால் பல நன்மைகள் உண்டாகும்.

பொதுவான குணங்கள்
பொதுவான குணங்கள்

மன உறுதியும், உடல் வலிமையும் கொண்டவர்கள். இவர்களின் கண்களில் எப்போதும் பிறரை ஈர்க்கும் கவர்ச்சி இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக முடிப்பதில் வல்லவர்கள். சுயகௌரவத்தை ஒரு போதும் விட்டுக் கொடுக்காதவர்கள். எந்த விஷயத்தையும் நன்கு ஆராய்ந்தே பிறகே ஏற்றுக் கொள்வார்கள். நண்பர்கள் குறைவாக இருப்பார்கள். பல மொழி பேசுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். பணிகளில் நேர்மையும், உண்மையும் இருக்கும். பதவி உயர்வுகள் தேடி வரும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். நீண்ட ஆயுள்காரர்கள். குழந்தைகள் என்றால் இவர்களுக்கு கொள்ளைப் பிரியம் தான்.

போலீஸ், ராணுவம், மருத்துவத் துறைகளில் சிறந்து விளங்குவார்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். எதிலும் வேகமாக செயல்பட எண்ணுபவர்கள். தீயணைப்பு, அறுவை சிகிச்சை, மருத்துவம், மாந்தீரிகம், ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஆர்வமிக்கவர்களாக இருப்பார்கள். எப்போதும் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டுக் கொண்டேயிருப்பார்கள். சும்மா இருப்பது இவர்களுக்கு பிடிக்காது.

அஸ்வினி முதல் பாதம்
இது செவ்வாய் கிரகத்தின் அம்சமாகும். நேர்மை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தனது சொந்த உழைப்பால் முன்னேறுவார்கள். குடும்பப் பாசம், வீரம், முரட்டுப் பிடிவாதம், தன்னம்பிக்கை, எல்லாவற்றையும் அனுபவித்து வாழ வேண்டும் என்ற குணங்களைப் பெற்றவர்களாக இருப்பார்கள். பிறருக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவார்கள். இந்த பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஆண் குழந்தைகள் அதிகமாக பிறக்கும் வாய்ப்புள்ளது. அடிக்கடி ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் கூட அடிப்படை வசதிகளுக்கு எந்தக் குறையும் ஏற்படாது.

எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்காக போராடும் குணம் கொண்டவர்கள். நட்புக்கு மிகுந்த மரியாதை அளிப்பவர்கள். சந்திரன் தீய கிரக சேர்க்கையில் இருந்தால் மற்றவர்களிடம் சண்டையிடுவது, தன்னை சுற்றி பிரச்னைகளை உண்டாக்குவது, அல்லது பிரச்னைகளை ரசிப்பது போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள்.

அஸ்வினி இரண்டாம் பாதம்
இரண்டாம் பாதம் சுக்ரனின் அம்சமாகும். புகழ், சிற்றின்ப விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களது தோற்றம் மற்றவர்களை கவரும் விதத்தில் அமைந்திருக்கும். மிகச்சிறந்த உயர் கல்வி கற்கும் யோகம் பெற்றவர்கள். நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். கலையில் ஈடுபாடு, பணம் சேர்ப்பதில் ஆர்வம் இருக்கும். பெரும்பாலும் காதல் திருமணமே கைகூடும். ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக யோசித்து செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள்.

நேர்மையான வழியில் மட்டுமே செயல்பாடுகள் அமைந்திருக்கும். சந்திரன் தீய கிரக சேர்க்கையில் இருந்தால் இவர்களுக்கு யோசிக்கும் திறமை நன்கு இருந்தாலும் அடுத்தவர்களுக்கு பயன்படாது. சிலர் தீய வழிகளில் கூட தங்கள் கவனத்தை செலுத்துவர்.

அஸ்வினி மூன்றாம் பாதம்
இது புதன் அம்சம் பெற்றதாகும். நல்லவனுக்கு நல்லவன், வல்லவனுக்கு வல்லவன் என்றிருப்பார்கள். நல்ல பேச்சாற்றல் இருக்கும். இதை வைத்து காரியத்தை எளிதாக சாதித்துவிடுவார்கள். கணிதம், வானவியல், ஜோதிடத்தில் ஆர்வம் காட்டுவார்கள். பெற்றோர்களை மதிப்பவர்கள். வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்த பிறகே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவார்கள். வசதிகளும், வாய்ப்புகளும் அதிகமாக இருந்தாலும் கூட எளிமை விரும்பிகளாக இருப்பார்கள்.

அடுத்தவர்களுக்கு உடல்நலம், மருத்துவம், யோகாசனம் போன்றவற்றை பற்றிக் கூறுவார்கள். விளையாட்டு மற்றும் வீரதிர செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு அந்த அனுபவங்களை மற்றவர்களுக்கு சொல்லும் மனப்பான்மை இருக்கும். அனுபவ அறிவைக் கொண்டு தொழில் தொடங்குவார்கள். தாயின் ஆதரவு இருக்கும். சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவார்கள். சந்திரன் தீய கிரக சேர்க்கையில் இருந்தால் மேற்கூறிய பலன்கள் சரியாக அமைந்துவிடுவதில்லை. எதிர்மறையாக குணங்கள் பெறுவதும் உண்டு.

அஸ்வினி நான்காம் பாதம்
நான்காம் பாதத்திற்கு அதிபதி சந்திரன். திறமையும், நேர்மையும் கொண்டவர்களாக விளங்குவார்கள் இந்த பாதத்தில் பிறந்தவர்கள். எப்போதும் ஒரு பரபரப்போடு காணப்படுவார்கள். நவீன ரக ஆடை, ஆபரணங்கள் அணிவதில் ஆர்வம் காட்டுவார்கள். எப்போதும் நண்பர்கள் புடைசூழ வலம் வருவார்கள். அழகிய உடலமைப்பும், வசீகரமும், முகத்தோற்றமும் அமையப் பெற்றிருப்பார்கள். தெய்வ பக்தியில் சிறந்து விளங்குவார்கள். உதவும் மனப்பான்மை உண்டு. எந்த ஒரு புதிய விஷயத்தையும் கற்றுக் கொள்வதில் ஆர்வம் இருக்கும்.

தங்களது அறிவாற்றல் மூலமாக எந்தச் செயலிலும் வெற்றி பெறுவார்கள். செயல் வெற்றி பெறவில்லை என்றால் மிகவும் வருத்தம் கொள்வார்கள். ஏனென்றால் தாயின் அரவணைப்பும், அன்பும் இவர்களுக்கு அதிகம் கிடைத்திருப்பதால் எதிலும் தாய்மை பண்புடன் செயல்படுவார்கள்.

அஸ்வினி நட்சத்திரக்கார்களுக்கான கோயில்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில். இறைவி பிரகன் நாயகி (பெரிய நாயகி). இந்த நட்சத்திரக்காரர்கள் தங்களது தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத் தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *