கார்த்திகை நட்சத்திரம் – kaarththigai natchaththiram

கார்த்திகை நட்சத்திரம்
27 நட்சத்திரங்களில் சூரியனின் முதலாவது நட்சத்திரமாக வருகிறது கார்த்திகை நட்சத்திரம். அழகான தோற்றமும், வலிமையான உடலமைப்பும், உஷ்ணத் தன்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். சிறந்த ஆலோசகராகவும், தன்னம்பிக்கைக் கொண்டவராகவும் விளங்குவார்கள். எந்த வேலையையும் ஆராய்ந்து சிறப்பாக செய்வதில் நிபுணர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். பார்ப்பதற்கு முரட்டுத்தனமானவராக தெரிந்தாலும் உள்ளத்தில் மென்மையைக் கொண்டவர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். கல்வியாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் சரி, எதிலும் முன்னணியில் இருக்க வேண்டும் என எண்ணுபவர்கள். மற்றவர்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்குவதில் வல்லவர்களாகத் திகழ்வார்கள். சிறந்த பேச்சாற்றல் மற்றும் விவாதம் புரியும் திறன் கொண்டவர்களாக திகழ்வார்கள். சிறந்த குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இசை மற்றும் கலைகளில் சிறந்த நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.


கல்வி

கல்வியில் சிறந்த விளங்குவார்கள். பலர் சிறந்த வழக்கறிஞர்களாகவும், பள்ளி ஆசிரியர்களாகவும், கல்லூரி பேராசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும் பணியாற்றுவார்கள்.

தொழில்

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் தொழில் செய்ய வேண்டும் என முற்பட்டால் கூட்டுத் தொழில் செய்வதை தவிர்ப்பது நல்லது. நூல் ஏற்றுமதி, மருந்து வணிகம், கைவினைப் பொருட்கள் தொடர்பான வணிகங்கள் மூலம் அதிகபட்ச நன்மைகளைப் பெறலாம். மேலும் தொழில்முறை மருத்துவம் அல்லது பொறியியலில் அதிக சிறப்பாக செயல்படுவார்கள்.

குடும்பம்

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காதல் என்பது பிடிக்காத விஷயமாக இருக்கும். கொண்ட கொள்கையில் இருந்து மாறமாட்டார்கள். திருமண வாழ்க்கையிலேயே கறாராக நடந்து கொள்வார்கள். மனைவி, பிள்ளைகளிடம் கூட விட்டுக் கொடுத்து போகமாட்டார்கள். தனக்கென தனி வழியை அமைத்துக் கொண்டு வாழ்வார்கள்.

ஆரோக்கியம்

முன்கோபம் கொண்டவர்களாக கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் இருப்பதால் ரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்கலாம். இதய நோய், உஷ்ண நோய், ஒற்றைத் தலைவலி, கண்களில் கோளாறு, காதுவலி போன்ற நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளது.

கார்த்திகை நட்சத்திர குணங்கள்
நட்சத்திர வரிசையில் 3வது இடத்தைப் பெறுகிறது கார்த்திகை (கிருத்திகை) நட்சத்திரம். இது முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். இதன் அதிபதி சூரிய பகவான். கார்த்திகை நட்சத்திரத்தின் 1ம் பாதம் மேஷ ராசியிலும், 2,3,4, பாதங்கள் ரிஷப ராசியிலும் இருக்கும். பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது.

பொதுவான குணங்கள்

எதற்கெடுத்தாலும் சுள்ளென்று கோபம் வரும். ஆனால் உடனே சாந்தமடைந்து விடுவார்கள். உழைப்பதற்கு சளைக்கமாட்டார்கள். அதற்கேற்ற ஆதாயத்தையும் பெறுவார்கள். குடும்பத்தினர் மீது அதிக பாசம் காட்டுவார்கள். உற்றார் உறவினர் எல்லோரிடமும் கனிவுடன் நடந்து கொள்வார்கள். எந்த வேலையையும் நேர்த்தியுடன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

நட்பில் நேர்மையை எதிர்பார்ப்பார்கள். நேர்மை தவறினால் தூக்கி வீசவும் தயங்கமாட்டார்கள். நேர்த்தியாக உடை உடுத்த வேண்டும் என்று எண்ணுபவர்கள். தோற்றப் பொலிவுடன் காணப்படுவார்கள். உயரிய அரசாங்க பதவிகளையும், உச்சபட்ச அதிகாரங்கள் பெற்ற பணிகளையும் செய்பவர்களாகவும் இருப்பார்கள். ஆணவமும், கர்வமும் கொண்டவர்கள். எந்த விஷயங்களிலும் உள்ள நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்து நியாயமான தீர்வை வழங்குபவர்களாக விளங்குவார்கள்.

கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நல்ல குணங்கள் நிறைந்த குணவான்களாகவும் இருப்பார்கள். வலிமையான உடலமைப்பையும், உஷ்ணம் நிறைந்தவர்களாகவும் காணப்படுவார்கள். இனிப்பு பண்டங்களை விரும்பி உண்பார்கள். சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். வீரக்கலைகளில் ஆர்வம் கொண்டு தேர்ச்சியும் பெறுவார்கள். சூடான உணவுகளை விரும்பி உண்பார்கள். பசி பொறுக்கமாட்டார்கள். கார்த்திகை நட்சத்திரக்கார்களுக்கு நோய்த் தாக்கம் குறைவாகவே இருக்கும்.

காதல் என்றாலே இவர்களுக்கு கசப்பு தான். மனைவியிடம் கூட கறாராகத் தான் நடந்து கொள்வார்கள். எதிலும் விட்டுக் கொடுத்துப் போக மாட்டார்கள். தான் கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக இருப்பார்கள். குழந்தைகளை சிறப்பாக வளர்ப்பார்கள். அதீதமான தெய்வ பக்தி இருக்கும். ஆயுள் பலம் உண்டு. சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். விவாதம் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். அதனால் தான் இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலர் சிறந்த வழக்கறிஞராகவும், பள்ளி ஆசிரியர்களாகவும், கல்லூரிப் பேராசிரியர்களாகவும் விளங்குவார்கள்.

கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதம்
இது குரு பகவானின் அம்சம் கொண்டது. சிறந்த ஞானத்தைப் பெற்றிருப்பார்கள். காரியங்களை தந்திரத்தால் வெல்பவர்கள். சுய கௌரவமிக்க புகழ் விரும்பிகள்.

கார்த்திகை இரண்டாம் பாதம்
இது சனி பகவானின் அம்சம் நிறைந்தது. ஆசை, பாசம், பற்றுள்ளவர்கள். தனக்கான லட்சியங்களை அடைய போராடும் குணம் கொண்டவர்கள். வீரம் நிறைந்தவர்கள். தற்பெருமையும் பேசுவார்கள்.

கார்த்திகை மூன்றாம் பாதம்
இதுவும் சனி பகவானின் அம்சம் பொருந்தியது.
பேராசை, பணவெறி, எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற வெறி இருக்கும். கோபம், பொறாமை, பழிவாங்கும் இயல்பைக் கொண்டிருப்பார்கள்.

கார்த்திகை நான்காம் பாதம்
நான்காம் பாதம் குருவின் ஆதிக்கம் பெற்றது.
தர்ம சிந்தனையும் இரக்கமும் கொண்டவர்கள். அடக்கம், ஒழுக்கம், நட்பு, பாசம் போன்ற நல்ல குணங்களைக் கொண்டது நான்காம் பாதம். சிறந்த தெய்வ பக்தி கொண்டவர்களாக இருப்பார்கள்.

கார்த்திகை நட்சத்திரக்காரர்களின் கோயில்
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, கஞ்சா நகரம் எனும் ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில். தாயார் துங்கபாலஸ்தானம்பிகை. கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் தங்கள் தோஷங்கள் நிவர்த்தியாவதற்கு இங்கு வந்து இத்தலை இறைவனை வழிபடுகின்றனர். திருமணத் தடை, குழந்தை பாக்கியம், சொத்து தகராறு, பிரிந்த குடும்பம் ஒன்று சேர இங்கு வழிபாடு செய்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *