ஒன்பது கிரகங்களும் – அதற்குரிய தாவரங்களும்

சூரியன்
பெரிய மரங்கள், மருந்து செடிகள், கோதுமை, நெல், வேர்க்கடலை, தென்னை, ஜாதிக்காய், மசாலா செடிகள், ஓமம், மிளகு, பெரிய காடுகள், நெல்லி, மணிபுங்கம், வெண் தேக்கு, வேங்கை மரம், வாதநாராயண மரம், எட்டி மரம், புங்க மரம், பலா மரம், பனை மரம், செந்தாமரை, பாலைவனம் முட்செடிகள், புதர்கள், மரங்கள் போன்றவற்றை அனைத்தும் சூரியன் குறிக்கும் தாவரங்கள் ஆகும்.

சந்திரன் :
நாவல் மரம், மந்தாரை நாகலிங்க மரம், அத்திமரம் தென்னை மரம் , சிறு நாகப்பூ, பாக்கு மரம், நெல், பழ மரங்கள், இளங்குறுத்துகள், முட்டைக்கோஸ், கிழங்கு, காளான், கரும்பு, பூசணி, பார்லி, புள் வகைகள், அனைத்து பூச்செடிகள், வெள்ளரி, சங்குப்பூ, உணவு சம்பந்தமான அனைத்து விவசாய பயிர்களும் சந்திரன் சார்ந்தவை.

செவ்வாய்:

கருங்காலி, வேப்பமரம், நீர் கடம்பை, வில்வம், புரசு, கொடுக்காய் புளி மரம், வன்னி மரம், கருவேல மரம், சீதாப்பழம் மரம், ஜாதிக்காய், மலை மற்றும் பாறைகள் உள்ள இடங்களில் வளரும் மரங்கள், கசப்பு சுவை தரும் மரங்கள், பூண்டு, வேர்கடலை, கடுகு , வெல்லம், தடினமான நெல் வகைகள், சிவப்பு நிற தானிய செடிமர வகைகள் போன்றவை செவ்வாய் குறிப்பிடும் தாவரங்கள் ஆகும்.

புதன் :

புன்னை மரம், முசுக்கொட்டை, இலந்தை மரம், பூவரச மரம், தங்க அரளி, செஞ்சந்தனம், பூந்தோட்டம், செடி கொடிகள், துளசி போன்ற பவித்திரமான செடிகள், நன்செய் புன்செய் மற்றும் அனைத்து பச்சை இலை உடைய தாவரங்களும் புதனுக்குரியவை.

குரு :

மலைவேம்பு, மூங்கில், நெல்லி, சிம்சுபா, பூவன் மரம், தூங்கு மூஞ்சி மரம், குங்கிலியம், சுந்தரவேம்பு, கள்ளி, மந்தாரை, கடல் அருகில் வளரும் தாவரங்கள், அடர்த்தியான வனப்பகுதி மரங்கள், ஆன்மீகம் சம்பந்தமான மரச் செடிகள், மஞ்சள், பூக்கள், மருந்து சார்ந்த மரங்கள், அனைத்து விதைகள் மூலிகை, தாவரம், ரப்பர் மரம், தாமரை நீரில் வளரும் பூக்களை போன்றவை அனைத்தும் குரு குறிப்பிடுவார்.

சுக்கிரன்:

அத்திமரம், கடம்பு, விளாமரம், நந்தியாவட்டை, பலாமரம், வாகை, ருத்ராட்ச மரம், வஞ்சிமரம், சந்தனமரம், எலுமிச்சை மரம், கால்நடைகள் மேயும் புல்வெளிகள், வயல்கள், வாசனை திரவியம் தரும் மரங்கள், இனிப்பான பழங்கள் தரும் மரங்கள், பருத்தி, தேயிலை, மல்லிகை, மசாலா தாவரம், ஆப்பிள் மரம், பட்டுப்புழு உண்ணும் இலைகள், காய்கறி, ஊறுகாய் மற்றும் பழக்கூழ் தயாரிக்க உதவும் தாவரங்கள், புளிப்பும் இனிப்பும் கலந்த புளியமரம் போன்ற மரங்கள் ஆகிய அனைத்தையும் சுக்கிரன் குறிப்பார்.

சனி :

நொச்சி, மகிழமரம், பூமருது, கோங்கு, தேக்கு வேம்பு, குள்மொஹார், செம்மரம், சேராங் கொட்டை, எண்ணெய் தரும் மரங்கள், கட்டட வேலைக்கு உதவும் மரங்கள், கடுமை தன்மை உடைய மரங்கள், வாழை, உருளைக்கிழங்கு, பார்லி, குளிரும் இறுக்கமுடைய மரங்கள், புன் செய்நிலம் வாய்வை உண்டாக்கும் காய்கறிகள், பெரிய குழிகள் தேவைப்படும் மரங்கள் போன்றவை சனியின் ஆதிக்கத்தில் வளர்ப்பவை.

ராகு :

செங்கருங்காலி, ஆனைக் குன்றிமணி, மருது, புளியமரம், கொன்றை, மந்தாரை, பரம்பை மரம், காற்றை உருவாக்கும் பெரிய விருட்சங்கள், போதை தரும் தாவரங்கள், காபி, விஷ செடிகள், மாந்திரீகத்திற்கு உதவும் சில செடிகள் போன்றவை ராகுக்குரிய தாவரங்கள் ஆகும்.

கேது :

காஞ்சிரை, மகிழமரம், தேயிலை, நண்டாஞ்சு, முசில மரம், இலுப்பை, பவளமல்லி மரம், ஆச்சா மரம், கொள்ளுசெடி, மாந்திரீக தாவரங்கள், வேர்கள், உலர்ந்த புல் மூலிகை செடிகள், ஆலமர விழுது, கொடிகள் முட்செடிகள் போன்றவை கேதுவின் தாவரங்கள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *