உத்திரட்டாதி நட்சத்திரம்

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் என்பதால் எப்போதும் உண்மையே பேசுவார்கள். மிகுந்த சமார்த்தியசாலிகளாக இருப்பார்கள். கவர்ந்திழுக்கும் காந்தம் போன்ற தோற்றத்தைப் பெற்றிருப்பார்கள். மென்மையான குணமும், தூய்மையான மனமும் கொண்டவர்கள். தோல்விகளை கண்டு துவண்டுவிடமாட்டார்கள். சாதுவான குணம் கொண்டவர்களாக இருந்தாலும் கூட கோபம் வந்தால் முரட்டுத்தனம் வெளிப்படும். யாருக்காகவும், எப்போதும் போலி வாழ்க்கை வாழமாட்டார்கள். நண்பர்கள் அதிகமாக இருந்தாலும் கூட அவர்களிடம் எந்த உதவியையும் எதிர்பார்க்கமாட்டார்கள். பிடிவாத குணம் கொண்டவர்கள். பேச்சில் வேகமும், விவேகமும் நிறைந்திருக்கும். பேச்சை விட செயலில் தான் ஈடுபாடு இருக்கும். யாருக்காகவும் தங்கள் குணத்தை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். எதிர்காலத்தை எண்ணி கனவு காணாமல் நிகழ்காலத்தையே நம்பி வாழ்வார்கள். மற்றவர்களுக்கு உதவும் குணம் பெற்றவர்கள். தியாக குணம் பொருந்தியவர்கள் என்பதால் தாராளமாக நன்கொடைகளை வழங்குவார்கள். இவர்களுக்கேயுரிய நற்குணங்களால் சமுதாயத்தில் நல்ல மரியாதையைப் பெறுவீர்கள்.

கல்வி
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களின் கல்வி சுமாராகத்தானிருக்கும். அப்படி இருந்தாலும் கூட இவர்களுக்கு உள்ள அறிவு அறிஞர்களுக்கு நிகரானதாக இருக்கும். பல விஷயங்களையும் கற்று நிபுணராகும் சிறப்பு திறன் கொண்டிருப்பார்கள். நுண் கலைகள் மற்றும் பல்வேறு புத்தகங்களை எழுதும் திறன் பெற்றவர்கள்.

தொழில்
தர்மத்தின் வழியில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். சட்டம் பயிலுபவர்களாகவும், பத்திரிகை ஆசிரியர்களாகவும், வானவியல், ஜோதிடம், மருத்துவம், வங்கிப் பணி போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். பள்ளி, கல்லூரி, கட்டுமான நிறுவனம், சிட்பண்ட்ஸ், பதிப்பகம் போன்றவற்றையும் நடத்துவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் யோகமும் உண்டு.

குடும்பம்
இந்த நட்சத்திரக்காரர்கள் மனைவியிடமும், பிள்ளைகளிடமும் அதிக பாசம் வைத்திருப்பார்கள். கலாச்சாம், பண்பாடுகள் தவறாமல் வாழ விரும்புவார்கள். எல்லா வசதிகளும் இருந்தாலும் கூட எளிமையான வாழ்க்கையே வாழ்வார்கள். தாய் மீது அதிக பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். இயற்கையான சூழலில் வீடு அமைத்து அமைதியாக வாழ வேண்டும் என எண்ணுபவர்கள். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வார்கள்.

ஆரோக்கியம்
இவர்களுக்கு தொடக்க திசை சனி என்பதால் நீர் தொடர்பான பாதிப்புகள், அஜீரணக் கோளாறு, கை, கால்களில் அடிபட வாய்ப்புள்ளது. கல்லீரல் பிரச்னை, அதிக மருந்துகள் உண்பதால் உள்ளுறுப்புகளில் பாதிப்பு உண்டாகும்.

உத்திரட்டாதி நட்சத்திர குணங்கள்
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். மீன ராசியைச் சேர்ந்தது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தச் சூழலிலும் உண்மையே பேசுவார்கள். எதிலும் நடுநிலைத் தன்மையோடு நடந்து கொள்வார்கள். சொன்ன சொல் தவறமாட்டார்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளியூர் பயணங்களை விரும்புவார்கள்.

பொதுவான குணங்கள்
தான தர்மம் செய்யும் சிந்தனை உள்ளவர்கள். எதையும் தொலைநோக்குச் சிந்தனையோடு அணுகுவார்கள். இதனால் சாதாரண நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்த நிலைக்கு முன்னேறுவார்கள். அதிகம் பேசமாட்டார்கள். இவர்கள் தொட்ட காரியமெல்லாம் துலங்கும். எல்லாம் தெரிந்தும் அலட்டிக் கொள்ளமாட்டார்கள்.

போலியான வாழ்க்கை வாழத் தெரியாதவர்கள். நீதி, நேர்மையை விட்டு எப்போதும் விலகாதவர்கள். கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள். சிலர் சிறு வயதில் பெற்றோரை பிரிந்திருக்க நேரிடும். சாதுவானவர்கள். ஆனால் முன்கோபம் வந்துவிட்டால் முரட்டுத்தனமாக இருக்கும். வானவியல், மருத்துவம், ஜோதிடம், வங்கித் துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.

நண்பர்கள் வட்டம் பெரியதாக இருக்கும். மனைவியின் அன்பை அதிகம் எதிர்பார்ப்பவர்கள். சொந்த வாகனங்கள் இருந்தாலும் நடந்து செல்லும் எளிமை விரும்பிகள். மரம், செடி, கொடி அமைந்த அமைதியான சூழலில் வாழ விரும்புவார்கள். அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்பவர்களாக இருப்பார்கள். வயதான காலத்தில் துறவறத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

உத்திரட்டாதி முதல் பாதம்
முதல் பாதத்தை ஆட்சி செய்பவர் சூரிய பகவான். இந்த பாதத்தில் பிறந்தவர்கள் அன்புக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள். உண்மையாக, வெளிப்படையாக நடந்து கொள்வார்கள். மற்றவர்களிடம் இந்த குணத்தை எதிர்பார்ப்பார்கள். தன்னம்பிக்கையோடு செயல்படுவார்கள். எந்தச் செயலையும் வித்தியாசமாகச் செய்து பிறரது பாராட்டுதல்களைப் பெறுவார்கள். உதவும் குணம் படைத்தவர்கள். குடும்பத்தினரிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள்.

உத்திரட்டாதி இரண்டாம் பாதம்
இரண்டாம் பாதத்துக்கு அதிபதியாக விளங்குபவர் புதன் பகவான். கலாச்சாரம், பண்பாட்டை மீறமாட்டார்கள். மனைவிக்கு சம உரிமை கொடுப்பார்கள். தேசப்பற்றும் மொழிப்பற்றும் கொண்டவர்களாக இருப்பார்கள். புகழ்ச்சியை விரும்பமாட்டார்கள். எடுத்த வேலையை முடிக்காமல் ஓய மாட்டார்கள். நண்பர்களுக்கு அதிகம் செலவிடுவார்கள். நேரம் வரும் போது திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.

உத்திரட்டாதி மூன்றாம் பாதம்
மூன்றாம் பாதத்திற்கு அதிபதி சுக்கிரன். எப்போதும் துருதுருவென இருப்பார்கள். எதையும் மாறுபட்ட கோணத்தோடு செய்வதால், அவை மற்றவர்களையும் கவரும், சிறப்பானதாகவும் அமையும். எப்போதும் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். தெய்வபக்தி நிறைந்தவர்களாக இருப்பார்கள். கலைகளில் ஆர்வம் உள்ளவர்கள். சகோதர, சகோதரிகளுக்காக எதையும் செய்வார்கள். பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்.

உத்திரட்டாதி நான்காம் பாதம்
இதன் அதிபதி செவ்வாய் பகவான். புத்திசாலிகள். முன்கோபிகளாகவும் இருப்பார்கள். நற்குணங்களை பெற்றிருப்பார்கள். பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மதித்து நடப்பார்கள். மனைவி, பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள். ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்ற முனைப்பு காட்டுவார்கள். சதா சர்வ காலமும் எதையாவது சிந்தித்துக் கொண்டேயிருப்பார்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுக்கா, தீயத்தூரில் அமைந்துள்ளது அருள்மிகு சகஸ்ரலட்மீஸ்வரர் திருக்கோயில். தாயார் பிரகன் நாயகி, பெரிய நாயகி. உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தங்களது தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபடுகின்றனர். கடன்கள் பிரச்னை தீர, செல்வம், செழிக்க, புத்திர பாக்கியம் கிடைக்க இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *