ஜோதிடம் கற்று கொள்ள ஆர்வமா ? படியுங்கள்

நேரடி ஜோதிட பயிற்சி

ஜனனி ஜன்ம சௌக்யானாம் வர்தநீ குலஸம்பதாம்
பதவி பூர்வ புண்யாணாம் லிக்ய தே ஜன்ம பத்திரிகா !

ஜோதிடத்தை சமஸ்கிரகத்தில் ஜோதிஷம் என்று கூறுவார்கள் . ஜோதி என்றால் ஒளி என்று பொருளாகும் , ஜோதிஷம் என்றால் ஒளியின் சிறப்பு என்று பொருள். ஜோதி இடம், ஜோதி திடம் எனப் பிரித்தும் பொருள் கொள்ளலாம். ஒரு ஜீவன் பூமியில் உதிக்கும் காலத்தில் வான வீதியில் பன்னிரு ராசிகளில் உள்ள 27 நட்சத்திரங்களில் நவகோள்களும் உலா வரும் நிலைகளை கொண்டு உயிர் அனுபவிக்க போகும் சுப துக்கங்களை நிர்ணயிக்கும் கணித சாஸ்திரமே ஜோதிடம். ஒளியை பற்றிய சாஸ்திரத்தை ஆராயும் கலையே ஜோதிஷம் ஆகும்.

மனித வாழ்க்கையை நல்வழியில் நெறிப்படுத்த இறையருளால் நம் முன்னோர்கள் உருவாக்கிய உன்னதமே ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள். இத்தகைய வேதத்தின் கண்களாக ஜோதிடம் போற்றப்படுகிறது.

ஒருவனின் முக்கால பலன்களை அறியக்கூடிய ஒரே கலை ஜோதிட கலை ஆகும், மனிதனை முழுவதுமாக பரிசோதிப்பவன் வைத்தியன், மனிதனக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை அறிந்து கொள்ள மனிதனை படிப்பவன் ஜோதிடன்.

ஜோதிடம் கற்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. இங்கு மிகக் குறைந்த கட்டணம், முழுமையான ஜோதிட கல்வி, பலன் அறிதல் மற்றும் பலனுரைத்தல், நுட்பமான சூட்சமங்கள், எளிமையான பரிகார முறைகள் அனைத்தும் பயிற்றுவிக்கப்படும். ” வாழ்வின் ரகசியம் அறிவோம்” அதற்கு ஜோதிடம் அறிவோம்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *