நவராத்திரி பாடல்கள்

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ!
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!

இந்த 7 நாமங்களை தினசரி 11 முறை உச்சரித்தால் ஆயிரம் நாமங்களை உச்சரித்ததற்கு சமம். ஈஸ்வர ஸ்வரூபமாக விளங்கும் காஞ்சி மஹா பெரியவர் அன்னை லலிதையின் ஆயிரம் திருநாமங்களில்,தனது உள்ளுணர்வால் தேர்ந்தெடுத்து கொடுத்துள்ளார். இந்த ஏழு நாமாக்கள் அதிசயங்கள் பல நிகழ்த்தும் என்பது முன்னோர் வாக்கு.

இந்த நாமாவளியை காலையிலும், மாலையிலும் பதினோறு முறை மனதார ஜெபம் செய்யுங்கள் மேலும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஏழு அற்புத மந்திரங்களை இடைவிடாது உச்சரிக்க வேண்டும். ஒருவித தியானம் போல செய்ய வேண்டும்.

இந்த மந்திர உச்சரிப்பானது ஒரு லட்சத்தினை கடக்கும் போது உங்களுக்கு உங்களது நியாயமான எண்ணங்கள் நிறைவேற அன்னை லலிதாம்பிகை அருள் பாலிப்பாள்.

இந்த மந்திரங்களை மனதில் உரு போடுங்கள் உரு ஏற திரு ஏறும் என்பது முன்னோர்கள் வாக்கு. நலம் அனைத்தும் தந்தருளும் நவராத்திரி நாட்களில் குடும்பமாக வீட்டுக்கு வருவோரை வரவேற்பதும் உபசரிப்பதும் ரொம்ப முக்கியம். வீட்டுக்கு வருபவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பார்கள். அவர்களின் ஆசியுடன் அம்பாளின் அனுக்கிரஹமும் கிரகத்தில் சேர, எல்லா வளமும் நலமும் பெற்று இனிதே வாழலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *