காரடையான் நோன்பு விரதமுறை

விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி சிறிய கோலமிட வேண்டும். அதன் மீது நுனி வாழை இலை போட்டு இரண்டு அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும். இலையின் ஓரத்தில் வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழம் வைக்க வேண்டும். அதன் மீதே நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும். அதன் முன் அமர்ந்து இலையைச் சுற்றி நீர் தெளித்து நிவேதனம் செய்ய வேண்டும். பின்னர் நோன்பு சரடை பெண்கள் தாங்களாகவே தங்கள் கழுத்தில் கட்டிக்கொள்ள வேண்டும். இறைவியர் படங்களுக்குச் சாற்ற வேண்டும். காரடையான் நோன்பன்று பெண்கள் மோர் சாப்பிடக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *