மேஷத்தின் பொது பலன்கள் மற்றும் சனிப்பெயர்ச்சி பலன்கள்

எந்த நிலையிலும் தைரியம் குறையாத மேஷ ராசி நண்பர்களே!

உங்கள் வாழ்க்கையில், நல்லது கெட்டது இரண்டையுமே சரிசமமாக பார்த்து வரும் நீங்கள் மற்றவர்களுக்காக உழைப்பதிலும் உண்மையாக போராடுவதிலும் எப்போதும் முதலிடத்தில் இருப்பீர்கள்.

கடந்த காலத்தை நீங்கள் படிப்பினையாக என்ன கூறியவர்கள் நிகழ்காலத்தை விட எதிர்காலத்தை பற்றிய சிந்தனை தான் உங்கள் மனதில் மேலோங்கி இருக்கும், அதைப் பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள்.

நீங்கள் மிகவும் பிடிவாதக்காரர்கள் மட்டுமல்ல, நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்கள் வழியில் யார் குறுக்கிட்டாலும் அவர்கள் மீது ஆவேசம் கொள்வீர்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல், எல்லாவற்றையும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் படைத்தவர் நீங்கள்.

உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய் சத்திரிய கிரகம் என்பதால் அரசியலில் உங்களுக்கு உயர்வு கிட்டும். ராஜ கிரகமான சூரியன் உங்கள் ராசியில் உச்சம் பெறுவதால் பிரகாசமான எதிர்காலம் உங்களுக்கு உண்டு.

மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் ஒன்றை பேச தெரியாத உங்களுக்கு அதுவே பலமும் பலவீனமாகும். ரகசியங்களை பாதுகாப்பதில் வல்லவரான உங்களுக்கு பலதரப்பட்டவர்களின் நட்பு கிட்டுவதுடன், அவர்களால் ஆதாயமும் அடைவீர்கள்.

உங்கள் ராசிநாதன் பூமி காரகன் என்பதால் இடத்தாலும் பூமியாலும் உங்களுக்கு லாபம் உண்டு.

பூமிக்கும், சகோதரத்துக்கும், காவல்துறைக்கும், ராணுவத்திற்கும் ஆதிக்கம் பெற்ற செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் சிறந்த லட்சியவாதியாக இருப்பீர்கள், உங்களை ஒரு சில சுயநலக்காரர், காரியவாதி என்று கூட விமர்சனம் செய்வார்கள், ஆனால் அதையெல்லாம் நீங்கள் காதில் வாங்கிக் கொள்ள மாட்டீர்கள்.

எந்த ஒரு செயலில் இறங்கினாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே உங்கள் நோக்கமாக இருக்கும். அதற்குரிய எல்லா வகையான செல்களிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். காரணம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் செயல்வேகம் மிகுந்தவர் என்பதால் அவருடைய ஆற்றல் உங்கள் செயல்களில் பிரகாசிக்கும்.0

உங்கள் ராசிநாதன் அக்னி காரகன் என்பதால் எந்த ஒரு காரியத்திலும் துணிச்சலாக இறங்குவீர்கள். பக்கத்துணை இல்லாமல் நீங்களே எந்த ஒன்றையும் சாதிக்க நினைப்பீர்கள். அதற்குரிய வேகமும் ஆற்றலும் உங்களிடம் இருக்கும்.

வெளிதோற்றத்திற்கு நீங்கள் கரடு முரடானவர் போல் தோன்றினாலும், உங்களை நெருங்கி வருபவர்களுக்கு உதவி செய்வதை உங்கள் நோக்கமாக இருக்கும்.

நினைத்ததை எண்ணுவதை செயலாக தூண்டும் கிரகம் உங்கள் ராசிநாதனான செவ்வாய் என்பதால் எதையும் எதிர்பார்த்து, காலம் வரட்டும் என்று காத்திருக்க மாட்டீர்கள். நினைத்ததை உடனே சாதித்து விட வேண்டும் என்ற செயல்படுவோம் ஆரம்பித்து விடுவீர்கள், உங்கள் செயலுக்கு யார் எதிரில் வந்தாலும் அவரை எப்படி வீழ்த்துவது என்பதை நீங்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருப்பீர்கள்.

எதிரிகளை அழிக்கும் பேராற்றல் பெற்றவர்கள் உங்கள் ராசியினர் மட்டுமே! மனம் இளகி, போனால் போகட்டும் பாவம் என்று நீங்கள் நினைத்து அமைதியானால் மட்டுமே எதிரிகளின் தலை தப்பும், அந்த அளவுக்கு ஆற்றல் மிக்கவர்கள் நீங்கள்.

மனித உடம்பின் தலைக்கும், முகத்திற்கும் மேஷமே காரணமாகிறது என்பதால், உங்களுக்கு சுய அறிவும் சொந்த மூளையையும் முகத்தை கவர்ச்சியாக வைத்துக் கொள்ளும் திறமையும் அதிகம் இருக்கும். உங்களால் புதிய புதிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள முடியும் அதன் மூலம் புதியனவற்றை உங்களால் தோற்றுவிக்கவும் முடியும் என்றாலும் சில நேரத்தில் ஆத்திரத்தாலும், படபடப்பாலும் உணர்ச்சி வேகத்தாலும் உங்கள் முயற்சிக்குரிய வெற்றிகளை உங்களால் எட்ட முடியாமல் போய்விடும், எனவே எந்த ஒரு முயற்சியிலும் திட்டமிட்டு ஈடுபட்டால் மட்டுமே உங்களால் வெற்றியை காண முடியும்.0

நீங்கள் எந்த ஒரு செயலிலும் மேம் போக்காக ஈடுபட மாட்டீர்கள், அதன் கடைசி வரையில் சென்று உங்கள் முத்திரையை பதிப்பீர்கள், சவாலான விஷயங்களையும் சாதாரணமாக ஏற்ற முடித்து காட்டும் வல்லமை பெற்றவர்கள் நீங்கள், உங்கள் வாழ்க்கை முழுவதும் இனிய நினைவுகளும், இளமைத் துடிப்பும், மற்றவர்களை ஈர்க்கும் தோற்றமும், உங்கள் சுய ஆற்றலாலோ, சாதுரியத்தாலோ உங்கள் தனித்தன்மையாலோ உங்கள் வாழ்நாள் வரையில் உங்களிடம் இருக்கும், பலர் இருக்கும் இடத்தில் நீங்களே முதன்மையாளராய் இருப்பீர்கள்.

எல்லோருக்கும் ஆதரவு காட்டி, முன்னேற்றி விட நினைக்கும் உங்களை சிலரால் புரிந்து கொள்ள முடியாது. உங்களை ஒருவர் நம்பி விட்டால் உங்களைக் கொண்டே எல்லா காரியங்களும் வெற்றி கொள்ள முடியும், உங்களுக்கு முன் கோபம் அதிகம் என்பதால் பின் விளைவுகள் பற்றி எல்லாம் கவலைப்படாமல் எப்படிப்பட்டவரையும் இதற்கு ஆரம்பித்து விடுவீர்கள், இதனால் உங்களுக்கு நட்பு வட்டம் குறுகியதாகவே இருக்கும்.

உங்களுக்கு வாழ்வில் ஏதாவது ஒரு லட்சியம் இருக்கும். அதை அடைவதற்கான வாய்ப்பையும் நீங்கள் இயல்பாகவே பெற்று இருப்பீர்கள். நீங்கள் ஈடுபடும் காரியத்தில் உடனே வெற்றியை பார்த்து விட வேண்டும் என்று நினைப்பீர்கள், அதில் வெற்றியை அடைய முடியாது நிலையில் அதை அப்படியே விட்டு விட்டுவேறு முயற்சியில் ஈடுபட ஆரம்பிப்பீர்கள். இதற்கு காரணம் உங்களிடம் உள்ள அவசரத் தனமேயாகும். எந்த ஒரு செயலையும் யோசித்து நிதானித்து செய்வதற்கு முயலுங்கள். நிச்சயமாக உங்களால் அதில் வெற்றியை காண முடியும்.

இதில் காதல் உணர்வு நிரம்பியவர்களாக இருப்பீர்கள். காதலைப் பற்றி நீங்கள் கட்டும் கற்பனை கோட்டையில் திருமணத்திற்கு ஏற்றதாக இருக்காது. எல்லாவற்றிலும் அவசரத்தனத்துடன் செயல்படும் நீங்கள் திருமண விஷயத்தில் மட்டும் அதுபோல் செயல்பட கூடாது. வாழ்க்கை துணை என்பது வாழ்க்கை முழுவதும் நிலைத்து நிற்கக் கூடியது என்பதால் உணர்ச்சி வேகத்தாலோ, தேவைகளாலோ, சந்தர்ப்ப சூழ்நிலைகளாலோ அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வராமல் ஆழ்ந்து யோசித்து எந்த முடிவுக்கு வர வேண்டும் இல்லையெனில் திருமண வாழ்க்கை உங்களை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கி விடும் எனவே உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் அறிவுக்கு இடம் கொடுத்தால் மட்டுமே உங்கள் மண வாழ்க்கை மணக்கும்.0

பொதுவாக உங்களோடு சேர்ந்து வாழ்வது என்பது மிகவும் கடினம். சற்றென்று உணர்ச்சிவசப்படுதல், அதிகமாக எதிர்பார்த்தல், தான் விரும்பும் ஒன்றை வற்புறுத்தி அதிகமாக அடையமுடியுதல் என்ற போக்கு கொண்ட உங்களை திருப்தி படுத்த முடிந்தவர்களால் மட்டுமே உங்களோடு சந்தோஷமாகவும் நிலையாகவும் குடும்ப நடத்த முடியும்.

பொதுவாக குடும்ப வாழ்க்கையை பெரிதும் விரும்பும் நீங்கள் உங்கள் வீட்டில் வசதிகளும் மகிழ்ச்சியும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அதிகம் உழைப்பீர்கள். என்றாலும் யாராலும் உங்களை கட்டி போட்டு வைக்க முடியாது, பிடித்தம் இல்லாத எந்த ஒரு பொறுப்பையும் உங்கள் மீது திணிக்கவும் முடியாது.

பெரும்பாலும் உஷ்மான உடல் வாய்ந்தவர்களாகவே இருக்கும் உங்களுக்கு காய்ச்சல், ஜுரம், தலைவலி, தளர்ச்சி என்று அடிக்கடி தோன்றலாம். சிலருக்கு தூக்கம் இல்லா நிலையும் இருக்கும். வேலையில் முழு மூச்சுடன் செயல்படும் உங்களுக்கு நரம்பு தளர்ச்சி, ரத்த சோகையும் ஏற்படும். அதனால் பிற்காலத்தில் மூட்டு வீக்கம் வாதம் என்றும் பாதிக்கப்படுவீர்கள். எனவே வீண் டென்ஷனை குறைத்து வாழுங்கள்.0

பொதுவாக மேஷ ராசியின குழந்தை செல்வத்திற்கு குறைவில்லாதவர்கள் என்றாலும் குழந்தைகளுக்கும், உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகி விடும், எந்த ஒன்றையும் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் பெற்ற உங்களுக்கு உங்கள் தகுதியின் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட உங்கள் திறமையின் மூலம் கிடைக்கும் வருமானமே அதிகமாக இருக்கும். ஒரு துறையில் தகுதி கொண்டு ஒருவர் சாதிக்கும் சாதனையை விட, அது பற்றி தெரிந்து கொண்டு நீங்கள் சாதிப்பது 100 மடங்காக இருக்கும். இவையெல்லாம் மேஷ ராசியில் பிறந்தவர்களின் பொது பலன்கள் ஆகும்.

மேஷ ராசியில் பிறந்தவர்களாக இருந்தாலும் ஒவ்வொரு ஜாதகமும் வேறுபட்டிருக்கும். ஒருவருடைய ஜாதகத்தில் அமைந்திருப்பது போல் அடுத்தவர் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்திருப்பதில்லை. ஒருவருக்கு நட்பாக ஆட்சியாக உச்சமாக அமைந்திருக்கும் கிரகங்கள் அடுத்தவருக்கு நீச்சமாகவும் பகையாகவும் அமைந்திருக்கலாம். அதனால் பலன்களும் மாறுபடலாம்.

ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் கிரகங்கள் மாறும், தசாபுத்தி மாறும். அதனால் பலன்களும் மாறும் என்றாலும், சனிப்பெயர்ச்சி நிகழும் போது, சனி பகவான் அமரும் இடம், அவர் பார்க்கும் இடங்களை வைத்து பலன்களில் மாறுதல் உண்டாகும் என்பதால், சனி பகவானால் நமக்கு உண்டாகிடக் கூடிய பொது பலன்களையும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறோம்.0

மேஷத்திற்கு லாப சனி

இதுவரையில் உங்கள் மேஷ ராசிக்கு தொழில் ஸ்தானம் என்னும் பத்தாம் வீட்டில் இருந்த சனி பகவான் உங்கள் முன்னேற்றத்திற்கு எல்லாம் தடைகளையும், உடல் உபாதைகளையும், செல்வாக்கு, கௌரவம் போன்றவற்றுக்கு பங்கத்தையும், வீட்டிலும், வெளியிலும் பிரச்சனைகளையும், பண பற்றாக்குறை வருமானத்தில் சிரமத்தையும் வழங்கி வந்த உங்களை ஆட்டி படைத்தார்.

கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் நீங்கள் பட்டா சங்கடங்கள் கொஞ்சமா? நஞ்சமா? உங்களை பாடாய்படுத்திய பிரச்சினைகள் எல்லாம் நீங்கள் எப்படி சமாளித்து வந்தீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். பூமியில் உள்ள ஒவ்வொரு ஜீவராசியும் உலகில் வாழ்வதற்கு காரணமாக இருப்பது அதன் உடலில் உள்ள உயிரை ஆகும். அப்படிப்பட்ட உயிருக்கு ஜீவன் ஆளியாக அமைவது உயிர் காரகம், ஆயில் காரகமான சனீஸ்வர பகவான் தான்.

தனக்குள் உள்ள உயிர் வெளியேறி விடக்கூடாது என்று ஒவ்வொரு உயிரும் முயல்கின்றனர். அந்த உயிரை எத்தனை காலம் ஒவ்வொரு உடலிலும் நீடிக்க வைத்திருப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவர் ஆயுட்காரர்கள் அதிபதியான சனீஸ்வர பகவான் தான்.

கிரகங்களில், குரு பகவான் அமரும் வீடு பலன் தராது. அவர் பார்க்கும் வீடுகள் பலன் தரும், ஆனால் சனி பகவான் எந்த வீட்டில் அமர்கிறாரோ அந்த வீட்டுக்குரிய பலன்களை அவர் வழங்குவார். அவர் பார்க்கும் வீடுகளுக்குரிய பலன்களை துர்ப்பலன்களாக வழங்க வார். சனிபகவான் உங்கள் ராசிக்கு தொழிலுக்கும் லாபத்திற்கும் உரியவர் ஆவார்.

இரண்டரை ஆண்டுகள் பத்தாம் இடம் எனும் தொழிற் ஸ்தானத்தில் சஞ்சரித்து, விரயத்தை ஏற்படுத்தி, சுகத்தை கெடுத்து, அலைச்சலையும், அவமானத்தையும் வழங்கி இல்லற வாழ்வில் சங்கடங்களை உண்டாக்கி, திருமண யோகத்தை தள்ளி வைத்து உங்களை பல விதத்திலும் சங்கடப்படுத்தி வந்த சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகும் இக்காலத்தில் பல்வேறு நன்மைகளை அடையப் போகிறீர்கள். தொழில் மூலம் சிறப்பான வருமானம், வீட்டில் மகிழ்ச்சி ஆனந்தம் என்ற நிலையும், பொன் பொருள் சேர்க்கையும், பெண்களால் முன்னேற்றத்தையும் காணப் போகிறீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கூடி வரும், வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு புதிய துணை அமையும், ஒரு சிலருக்கு தொழில் மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றம், ஊர் மாற்றம் என்று வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படலாம். அதனால் நன்மைகளை அடையலாம். லாபமும் யோகமும் கூடி பணம் பதவி என்று உங்கள் வாழ்க்கையை செழிப்பாகும்.

பதினொன்றில் சஞ்சரிக்கும் சனி பகவானால் இத்தகைய சிறப்பான பலன்களை நீங்கள் காணப் போகிறீர்கள். இதே காலத்தில் உங்கள் ஜென்ம ராசியும் பஞ்சமஸ்தானம் என்னும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் ஆயுள் ஸ்தானத்தையும் சனி பார்வையிட போகிறார்.

ஜென்மத்தை பார்க்கும் சனி பகவானால் வேலைப்பளு அதிகரிக்கும், கலைச்சல் உண்டாகும். அதன் காரணமாக உடல் நலனில் உபாதை உண்டாகும். ஒரு சிலர் பணி நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியூர் செல்லும் நிலையும் உண்டாகலாம். புதிய நண்பர்களின் சேர்க்கை, அதனால் சட்டப் பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.

பூர்வ புண்ணியத்தை பார்க்கும் சனி பகவானால் புத்திரர் முத்திரிகளால் வேதனை நிகழலாம். குடும்பத்தில் கலகமும், சண்டை சச்சரவு உண்டாகலாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். குழப்பத்தில் சிக்கி தவிப்பீர்கள். வேதனை தரும் நிகழ்ச்சிகளால் அதிர்ச்சி அடைவீர்கள். ஆயில் ஸ்தானத்தை பார்க்கும் சனி பகவானால் உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டியதாகும். பல்வேறு இடர்பாடுகளும், தம்பதியர் இடையே கருத்து வேறுபாடும், உறவினர்களிடம் பகையும் உண்டாக்கலாம்.

இவையெல்லாம் ராசிக்கு 11 சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வைகளால் உண்டாகும் பலன்கள் என்றாலும், 11 சஞ்சரிக்கும் சனியால் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். சனிபகவான் 11 சஞ்சரிக்கும் காலத்திலும் சில காலகட்டங்களில் தான் சிரமத்தை வழங்குவார்.

சனிபகவான் உங்கள் ராசிக்கு லாபாதிபதி என்பதால் உங்களை பாதுகாக்க வேண்டிய வரும். லாபம் வழங்க வேண்டிய வரும் அவரே ஆகிறார். அதனால் உங்களுக்கு தலைக்கு வரும் துன்பங்களை எல்லாம் தலைப்பாகையோடு போகம் அளவிற்கு செய்துவிடுவார் சனிபகவான்.0

பரிகாரம்

சனிபகவானின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிட்ட ஒரு முறை, திருநள்ளாறு சென்று நலத்திட்டத்தில் நீராடி தர்பாரண்யேஸ்வரரை அர்ச்சித்து வணங்கி வாருங்கள். வாய்ப்புகள் கிடைக்கும் போது விழுப்புரம் அருகில் உள்ள கல்பட்டில் எழுந்து அருளியுள்ள காக்கை வாகனனை சென்று தரிசித்து வாருங்கள். சனிக்கிழமைகளில் தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்கி பசித்த வயிற்றின் நெருப்பை அடக்குங்கள். நலமுண்டாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *