12 ராசிகளுக்கான விநாயகர் சதுர்த்தி வழிபாடு – Ganesha Chaturthi Worship for 12 Rasis 2023

சதுர் என்றால் நான்கு என்று அர்த்தம். நான்கு என்பது 1-4-7-10 கேந்திர ஸ்தானங்களாக குறிக்கக்கூடிய நாளாகவும் விநாயகருக்கு உகந்த திதியாகவும் அமைந்துள்ளது.

கேது பகவானின் அதிதேவதையாக இருக்கக்கூடியவர் தான் விநாயகர். கேது என்பவர் நமக்கு ஆத்மா ரீதியான இன்பங்களை தரக்கூடியவர், துன்பங்களால் நம்மை துரத்தி வாழ்க்கையின் தத்துவ மூலத்தை உணர்ந்து ஞானத்தை அளித்து பிறவி பிணியை அறுக்க கூடியவர். கர்மவினையை அனுபவித்து தீர்க்கும் போது ஏற்படக்கூடிய இன்னல்களை தான் நாம் துன்பம் என்று கூறுகின்றோம். யோகங்களை அளித்து நம்மை புற இன்பங்களில் நாட்டம் கொள்ள வைத்து கர்ம வினைகளை அதிகப்படுத்தி கொடுப்பது ராகு பகவான். நம்முடைய ஜாதகத்தில் யோகங்களை தரக்கூடியவர். கேது பகவான் என்பவர் அவயோகத்தை கொடுத்து கர்மாவை அளித்து மோட்ச பிராத்தத்தை தரக்கூடியவர்.

மேஷம் மற்றும் விருச்சக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர்

 • செவ்வாயின் வீடு.
 • செவ்வாய் என்பவர் 1- 8 ஆம் இடத்திற்கு அதிபதி.
 • நம்முடைய அவமானங்கள், விபத்துகள், கோர்ட் கேஸ், ஆயுள் பலம், நோய் நொடிகள் நீங்கி, மறைமுக எதிரிகள் தொல்லை நீங்குவதற்கு

சிகப்பு குங்குமத்தால் விநாயகரை பிடித்து அவருக்கு செவ்வரளி மாலை சாற்றி வேப்பெண்ணையால் தீபம் ஏற்றி வழிபடுவதால் மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்கு மேன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும்

ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர்

 • கால புருஷனுக்கு 2 – 7 ஆம் இடம்
 • இரண்டாம் இடம் என்பது தனம், குடும்பம், வாக்கு.
 • ஏழாம் இடம் என்பது களத்திரஸ்தானம், சமூகம், இணக்கம், திருமணம் இதில் இருக்கக்கூடிய தடைகளை போக்கி தனத்தை பெருக்கி வாழ்க்கையை சிறப்பாக நடத்துவதற்கு

சந்தனம் அல்லது நாட்டுச் சர்க்கரையில் ஒரு விநாயகரை பிடித்து அவருக்கு மல்லிகை பூ சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபடுவது அவர்களுக்கு மேன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர்

 • கால புருஷனுக்கு 3 – 6 ஆம் இடத்துக்கு அதிபதி புதன்.
 • 3 ஆம் இடம் என்பது தைரிய வீரிய ஸ்தானம், செய்தி மக்கள் தொடர்பு ஸ்தானம்.
 • 6 ஆம் இடம் என்பது ரோக சத்ரு ஸ்தானம். ஆறாம் இடம் என்பது அறுவடை செய்யக்கூடிய ராசியுமாக இருப்பதால்

பச்சை குங்குமத்தால் விநாயகரை பிடித்து மரிக்கொழுந்து சாற்றி இலுப்பு எண்ணெயால் தீபம் ஏற்றி வழிபடும்போது 3 மற்றும் 6ஆம் பாவகம் உண்டான அனைத்து சுகங்களையும் பெறலாம்

கடகம்

 • நாளாமிடம் என்பது வீடு வண்டி வாகனம் பெண்களின் கற்பு ஸ்தானம் இவற்றில் மேன்மையும் உயர்வையும் பெறுவதற்கும் கண் திருஷ்டி தீருவதற்கும்

உப்பு அல்லது அரிசி மாவால் செய்யப்பட்ட விநாயகருக்கு வெண்தாமரை மலர் சூட்டி புங்கை எண்ணெயால் தீபம் ஏற்று வழிபட மேன்மையும் , உயர்வையும் பெறலாம்

சிம்மம்

 • பூர்வ புண்ணியம், புத்திர ஸ்தானம் என்று சொல்லக்கூடிய சிம்ம ராசி.
 • சிம்ம ராசியின் அதிபதி சூரியன்.


அரப்பு நிற குங்குமத்தால் விநாயகரை பிடித்து செந்தாமரை சாற்றி அல்லது எருக்கன் மாலை சாற்றி விளக்கெண்ணெய் தீபமேற்றி வழிபட ஐந்தாம் பாவகம் பலம் பெறும்.

தனுசு மற்றும் மீனம் ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர்

 • இரண்டும் குருவின் வீடு.
 • ஒன்பதாம் இடம் என்பது பாக்கியஸ்தானம், தர்மஸ்தானம், புண்ணிய ஸ்தானம், பித்ரு ஸ்தானம்.
 • பன்னிரண்டாம் இடம் என்பது விரயம், மோச்ச ஸ்தானம், அயன சயன ஸ்தானம்.

அதில் உள்ள தடைகளை போக்குவதற்கு மஞ்சளினால் விநாயகரை பிடித்து முல்லை மலர் சூட்டி தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது மேன்மையையும், சிறப்பையும் ஏற்படுத்தி கொடுக்கும்.

மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர்

 • அதிபதி சனி.
 • தொழிலில் மேன்மை லாபத்தை பெறுவதற்கு

பசு சானம் அல்லது புற்றுமண் எடுத்து விநாயகரை பிடித்து கனகாம்பரம் சூடி நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடும்போது உயர்வை ஏற்படுத்திக் கொடுக்கும்.

 • பொதுவாக செவ்வரளி, தர்ப்பை சாற்றலாம்.
 • புளிப்பு சுவை உள்ள தானியங்களை நெய்வேத்தியமாக செய்யலாம்.
 • சித்திர வண்ண வஸ்திரத்தை சாற்றலாம் அல்லது உங்கள் ராசி அதிபதி வர்ணத்தை விநாயகருக்கு சாற்றி வழிபடலாம்.

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு முக்கியமான பொருட்கள்

எருக்கன் மாலை, அருகம்புல் மாலை, எள், அச்சு வெல்லம், கரும்பு துண்டு, அவுல், பொரிகடலை, கொழுக்கட்டை இவைகளை வைத்து வழிபடுவது மிகவும் சிறப்பு.

 • ஜோதிடர்கள் எனில் உச்சிஷ்ட மஹா கணபதி மந்திரத்தை பாராயணம் செய்வது வாக்கு சிதியை ஏற்படுத்தி கொடுக்கும்.

உச்சிஷ்ட கணபதி மந்திரம்
ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்தி முகாய,லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம்
கம் கேகே ஸ்வாஹா

 • சிரமத்தில் இருப்பவர்களெனில் சங்கடஹர மந்திரத்தை சொல்வதால் வெற்றி பெறுவார்
 • மாணவர்களில் சித்தி புத்தி கணபதியும் வல்லப கணபதியும் வணங்கி பிருகு முனிவரால் அருளிய கணபதி மந்திரம் காலையிலும் மாலையிலும் 21 முறை சொல்லி மேன்மையும் உயர்வையும் தரும்.


ஓம் விக்கினராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்பகன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வாய நம!

வாழ்வில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்கி உயர்வையும் மேன்மையும் பெறுவதற்கு வீட்டில் விநாயகரை ஆவோஹனம் செய்து வழிபடவும்.

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

1 thought on “12 ராசிகளுக்கான விநாயகர் சதுர்த்தி வழிபாடு – Ganesha Chaturthi Worship for 12 Rasis 2023

 1. 🌸மிக மிக அருமையான பதிவு .ஒவ்வொரு ராசிக்காரர்களும் கண்டிப்பாக படித்து வழிபடக்கூடிய வழிமுறைகளை மிக தெளிவாக விளக்கி உள்ளீர்கள். மிக்க நன்றி !பல சிரமங்களுக்கு இடையில் ஊக்கம் குறைந்து, செயல் திறன் குறைந்து, துவண்டு இருப்பவர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டியாகவும் ஊக்கமூட்டுவதாகவும் தங்கள் பதிவு அமைந்துள்ளது. மிக்க மகிழ்ச்சி!! வாழ்த்துகள்!!!🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *