12 பாவகளின் மீது கோச்சார ராகு சஞ்சார பலன்கள்

லக்னம் அல்லது லக்னாதிபதி மேல் கோச்சார ராகு

 • ஜாதகருக்கு இடமாற்றம் உண்டாகும்.
 • வெளிநாட்டு பயணம் உண்டாகும்.
 • புதிய நண்பர்கள் தொடர்பு உண்டாகும் பழைய நண்பர்கள் மாறுவார்கள்.
 • ஸ்கேன் எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பார்கள்.
 • அரிப்பு தொந்தரவு உண்டாகும்.
 • ஒரு மாற்றத்தை முன்னேற்றத்தை பயணம் ஆகும்.
 • தன் ஆரோக்கியத்தைப் பற்றிய கவலை உண்டாகும்.

இரண்டாம் இடம் அல்லது இரண்டாம் இடம் அதிபதி மேல் கோச்சார ராகு

 • குடும்பத்தை விட்டு பிரிவார்கள் ஏற்கனவே குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தால் குடும்பத்துடன் வந்து இணைவார்கள்.
 • பொருளாதாரம் பற்றிய கேள்வி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.
 • கண்கள் பற்கள் சம்பந்தமான தொந்தரவு இருந்து கொண்டே இருக்கும்.
 • பெரியம்மாவுக்கு இடமாற்றம் உண்டாகும் அல்லது அறுவை சிகிச்சை உண்டாகும்.
 • திருமணம் ஆகாதவருக்கு திருமணம் கைகூடும்.
 • வரவேண்டிய பணம் வந்து சேரும்.
 • ஊதிய உயர்வு உண்டாகும்.
 • வட்டிக்கு கொடுப்பார்கள். வட்டி மூலம் தன வருமானம் கிடைக்கும்.
 • யாருக்கும் வாக்குறுதி கொடுக்கக் கூடாது.
 • அடிப்படை கேள்வியில் மாற்றங்கள் உண்டாகும்.
 • முகத்தில் காயங்கள் உண்டாகும் அல்லது பருக்கள் தோன்றும்.

மூன்றாம் இடம் அல்லது மூன்றாம் அதிபதி மேல் கோச்சார ராகு

 • இளைய சகோதரம் பிறத்தல் அல்லது இளைய சகோதரம் இடமாற்றம் ஆவார்கள்.
 • சகோதரனுக்கு மருத்துவ செலவு உண்டாகும்.
 • ஜாதகருக்கு எக்ஸ்ரே ஸ்கேன் எடுக்கும் சூழ்நிலை உண்டாகும்.
 • கைரேகை வைப்பதிலும் மற்றும் ஜாமீன் போடுவதால் தொல்லைகள் உண்டாகும்.
 • ஜாதகருக்கு ENT ப்ராப்ளம் உண்டாகும்.
 • புதிதாக சீட்டு சேர்ப்பார்கள் அல்லது சீட்டு சேருவார்கள் அல்லது சீட்டு கட்ட முடியாத சூழ்நிலை உண்டாகும்.
 • ஜாதகருக்கு இடமாற்றம் உண்டாகும்.
 • ஜாதகருக்கு தற்கொலை எண்ணங்கள் உண்டாகும்.
 • பத்திரப்பதிவு மற்றும் கமிஷன் மூலம் வருமானமும் உண்டாகும்.
 • இடது கை பழக்கம் உண்டாகும்.
 • ஜாதகர் மீது வீண் வதந்தி உண்டாகும் அல்லது ஜாதகர் குறித்து யாராவது பெட்டிசன் போடுவார்கள்.
 • ஆவணங்கள் தொலைந்து போகும் நிலை உண்டாகும் அல்லது பத்திரங்கள் மாற்றி எழுத வேண்டிய சூழ்நிலை உண்டாகும் அல்லது ஆவணங்கள் லைசன்ஸ் புதுப்பித்தல் செய்வது நடக்கும்.
 • இசை பாடல் பாடுவதில் நாட்டம் உண்டாகும் அல்லது அதை கேட்பதில் நாட்டம் உண்டாகும்.
 • புதிய இசைக்கருவி அல்லது மியூசிக் பிளேயர் வாங்குவார்கள்.
 • மிமிக்ரி செய்வார்கள் குரல் மாற்றி பேசுவார்கள்.
 • பாடல்கள் பாடுவார்கள்.
 • வாக்கிங் மற்றும் எக்சர்சைஸ் செய்வது உண்டாகும்.

நான்காம் இடம் அல்லது நான்காம் அதிபதி மீது கோச்சார ராகு

 • ஜாதகருக்கு வீடு மாற்றம் வாகன மாற்றம் உண்டாகும்.
 • வீடு வாகனங்கள் வாங்குவார்கள்.
 • தாயாரைப் பற்றிய கேள்வி உண்டாகும்.
 • தாயாருக்கு மருத்துவ செலவு உண்டாகும்.
 • ஜலதோஷம் சளி தொல்லை உண்டாகும்.
 • புதிதாக போர் போடுவார்கள்.
 • உறவினரிடம் இருந்து விலகுவார்கள்.
 • இருதய பயம் உண்டாகும்.
 • பதவியில் மாற்றம் உண்டாகும்.
 • மழையினால் மற்றும் நீரால் தொல்லைகள் உண்டாகும்.
 • வளர்ப்பு பிராணிகள் வாங்குவார்கள் அதாவது அவற்றை விற்று விடுவார்கள்.
 • வீட்டுக்குள் பாம்பு வரும்.
 • நதிகளில் நீராடுவார்கள்.
 • புதிய ஆடைகள் வாங்குவார்கள் பழைய ஆடைகளை மாற்றுவார்கள்.
 • பிறந்த இடத்தை விட்டு வெளியே செல்லும் சூழ்நிலை உண்டாகும்.
 • புத்தகங்கள் வாங்குவார்கள்.
 • புதிதாக மரம் வளர்ப்பார்கள் அல்லது ஏற்கனவே உள்ள மரத்தை எடுத்து விடுவார்கள்.
 • கல்லறை வழிபாடு செய்வார்கள்.
 • பிறந்த ஊரை பற்றிய சிந்தனை உண்டாகும்.
 • விவசாய எண்ணங்கள் உண்டாகும்.
 • 4 மற்றும் 12 ஆம் அதிபதி பலம் பெற்றால் விவசாய எண்ணம் மேலோங்கும்.ஜாதகத்தில் இந்த அமைப்பு இருப்பவர்கள் தன் கையால் விதைத்தால் விளைச்சல் அதிகமாக கிடைக்கும்.
 • கோழிப்பண்ணை, மாட்டுப் பண்ணை, ஆட்டுப்பண்ணை, நாய் பண்ணை வைப்பார்கள்.

ஐந்தாம் இடம் அல்லது ஐந்தாம் அதிபதி மீது கோச்சார ராகு

 • குழந்தை உண்டாகும், உறவிலும் குழந்தை உண்டாகலாம்.
 • கல்லூரி மாறும் முதல் பட்டம் ஒரு கல்லூரியிலும் மறுபக்கம் வேறு கல்லூரியிலும் படிப்பார்கள்.
 • ஆசிரியர்கள் மாறுவார்கள்.
 • குழந்தைகள் இடம் மாறி வாழ்வார்கள் அல்லது குழந்தையை பிரிந்து வாழ்வார்கள்.
 • குழந்தைகளுக்கு சொத்து உண்டாகும்.
 • வயிறு சம்பந்தமான ரோகம் உண்டாகும்.
 • குலதெய்வத்தைப் பற்றிய கேள்விகளும் குழப்பங்களும் உண்டாகும்.
 • குலதெய்வம் கோவில் புதுப்பிப்பார்கள்.
 • ஜோதிடம் மற்றும் வேதங்கள் படிப்பார்கள்.
 • ஆசிரியர் பணி அமையும்.
 • உபதேசம் செய்வார்கள்.
 • ஆன்மீக புத்தகங்கள் வாங்குவார்கள்.
 • கலைகளில் நாட்டம் உண்டாகும்/ கலைத்துறையில் நாட்டம் உண்டாகும்.
 • கோவில் யாத்திரை செல்வார்கள்.
 • ஷேர் மார்க்கெட் ஈடுபாடு உண்டாகும்.
 • புருவத்தை பற்றிய கேள்வி உண்டாகும்.
 • மறதி உண்டாகும் ( ஐந்து என்பது புத்தி).
 • மனித நேயம் உண்டாகும்.
 • ஒழுக்கம் உண்டாகும்.
 • உயர்ந்த சிந்தனைகள் தோன்றும்.
 • மதமாற்றம் உண்டாகும்.

ஆறாம் இடம் அல்லது ஆறாம் இட அதிபதி மேல் கோச்சார ராகு

 • உணவு பழக்கவழக்கங்கள் மாறும்.
 • இயற்கை உணவிற்கு மாறுவார்கள்.
 • உணவு சம்பந்தமான தொழில் அமையும்.
 • வேலை கிடைக்கும்.
 • வயிறு சம்பந்தமான ரோகம் உண்டாகும்.
 • கடன் வாங்குதல் அல்லது கடனை அடைத்தல் நடக்கும்.
 • வாய்வுத் தொல்லை இடுப்பு வலி உண்டாகும்.
 • சிறு விபத்துகள் நேரிடும்.
 • வேலையாட்கள் மாறுவார்கள்.
 • வாடகை வருமானத்தில் தடை உண்டாகும்.
 • இரண்டாம் சொத்து வாங்க முயற்சிப்பார்கள்/ வாங்குவார்கள். இரண்டாவது வாங்கிய சொத்தை முதலில் விற்பார்கள் அல்லது வாடகைக்கு விடுவார்கள்.
 • சித்தி மீது வெறுப்பு உண்டாகும் அல்லது சித்திக்கு உடல் நலக்குறைவு உண்டாகும்.
 • காவல் மற்றும் ராணுவம் சம்பந்தமான பணி கிட்டும் அல்லது போலீஸ் ராணுவத்தால் பிரச்சனைகள் உண்டாகும்.
 • இரவு நேர பணி அமையும்.
 • எதிரிகள் தொல்லை தீரும். (ஆறாம் அதிபதி வக்கிரம் ஆனால் எதிரிகள் மீண்டும் வருவார்கள்).
 • கடன் வாங்கும் எண்ணம் உண்டாகும் அல்லது கடனை மாற்றி அமைப்பது பற்றிய சிந்தனை உண்டாகும் அல்லது கடனை அடைப்பது உண்டாகும்.

ஏழாம் இடம் ஏழாம் அதிபதி மேல் கோச்சார ராகு

 • கூட்டுத் தொழில் உண்டாகும்.
 • திருமணம் பற்றிய கேள்விகள் சிந்தனைகள் உண்டாகும்.
 • தம்பதியர்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டாகும்.
 • இரண்டாவது குழந்தை பற்றிய கேள்வி உண்டாகும்.
 • வெளிநாட்டு செல்ல வெளிமாநிலம் செல்ல சிந்தனைகள் உருவாகும்.
 • கூட்டுத் தொழிலில் இருந்து விலகுதல்.
 • ஏழாமிடம் என்பது முதல் சம்பந்தத்தை குறிக்கும் இடமாகும். வயது முதிர்ந்த ஜாதகருக்கு வாரிசுகள் திருமணத்தை சம்பந்த யோகம் குறிக்கும் இடமாகும் இவ்விடத்தில் உள்ள சுக்கிரன் மீது ராகு செல்லும் பொழுது முதல் சம்பந்தம் உண்டாகும்.
 • புதிதாக நெய், நெய் பொருட்கள் விரும்பி சாப்பிடுவார்கள் ஏற்கனவே சாப்பிடுபவர் அதை விட்டு விடுவார்கள்.
 • தாம்பத்திய சுகம் சம்போகம் உண்டாகும் அல்லது விலக்கும்.
 • உறவில் ஒரு திருமணம் உண்டாகும்.
 • புதிய நண்பர்கள் அல்லது கூட்டாளிகள் வந்து செல்வார்கள்.
 • வெளிநாட்டு பயணம் உண்டாகும்.
 • ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.
 • சன்னியாசிகள்/ சாதுகளை சந்திப்பார்கள் அவர்களின் தரிசனம் ஆசிர்வாதம் பெறுவார்கள்.
 • திருமணம் ஆகாத நண்பர்கள் அல்லது நீண்ட கால நட்புகளை சந்திப்பார்கள்.
 • நண்பர்களை பல வருடம் கழித்து பார்ப்பது.
 • பிரிந்த குடும்பம் மற்றும் நட்புகள் வந்து சேரும்.
 • வெளிநாட்டு வருமானம் உண்டாகும்.
 • மனைவிக்கு உடல் நலக்குறைவு உண்டாகும்.
 • மூட்டு வலி உண்டாகும்.
 • மேற்கல்வி யோகம் உண்டாகும்.
 • இடம் சொத்து சம்பந்தமான முயற்சிகள் உண்டாகும்.
 • மனைவி பெயரில் சொத்து வாங்குவார்கள்.
 • வெளியூரில் சொத்து வாங்குவார்கள்.
 • கூட்டு முயற்சியில் சொத்து வாங்குவார்கள்.
 • திருமண மண்டபம் கட்டுதல் அல்லது திருமண மண்டபம் ஆல்ட்ரேஷன் செய்வார்கள்.

எட்டாம் இடம் அல்லது எட்டாம் அதிபதி மேல் கோச்சார ராகு

 • ஆரோக்கியம்.
 • பெரிய விபத்து உண்டாகும்.
 • அவ சொல் உண்டாகும்.
 • பயப்படுதல் உண்டாகும்.
 • சாமி ஆடுவார்கள் அல்லது குறி சொல்வார்கள் அல்லது அதை சார்ந்த இடத்திற்கு செல்வார்கள்.
 • செய்வினை ஏவல் பில்லி சூனிய பயம் உண்டாகும்.
 • கண் திருஷ்டி பயம் உண்டாகும்.
 • எல் ஐ சி வருமானம் பற்றிய கேள்வி உண்டாகும். எல் ஐ சி மூலம் வருமானமும் கிடைக்கும்.
 • Gratuvity முதிர்வு தொகை கிடைக்கும்.
 • பேராசையை தூண்டும்.
 • கழிவு நீர் வழியில் பிரச்சனை இருக்கும்.
 • வீட்டு முன்பு குப்பை தொட்டி வரும் ஏற்கனவே குப்பைத் தொட்டி இருந்தால் அது இடம் மாறி சென்று விடும்.
 • வெளிநாட்டு வருமானம் உண்டாகும்.
 • மறைமுக வருமானம் அதாவது லஞ்சம் லாவண்யம் உண்டாகும்.
 • வழக்குகள் உண்டாகும் அல்லது வழக்குகள் நீங்கும்.
 • அபகரித்தல் – இட அபகரிப்பு உண்டாகும் அல்லது அபகரிப்பு நீங்கும்.
 • வீண் பழி உண்டாகும்.
 • மணல் குவாரி அல்லது கிரானைட் சம்பந்தமான தொடர்பு உண்டாகும்.
 • பெட்ரோல் பங்கில் சார்ந்த கேள்வி உண்டாகும்.
 • மசாஜ் சென்டர் செல்வார்கள் அல்லது துவங்குவார்கள்.
 • உயில் சொத்து பற்றிய கேள்வி உண்டாகும்
 • வர்ம வைத்தியம் உண்டாகும்.
 • மூலம் பவுத்திரம் நோய் உண்டாகும்.
 • பேய் பயம் அல்லது அமானுஷ்ய சக்தியை பற்றிய பயம் உண்டாகும்.
 • கேஸ் சிலிண்டர் அல்லது கேஸ் டியூப் மாற்றுவார்கள்.
 • திருட்டுப் போகும்.
 • பொருட்கள் காணாமல் போகும்.
 • அடுப்புகள் மாற்றம் செய்வார்கள்.
 • சிறைவாசம் உண்டாகும்.
 • மருத்துவ செலவு உண்டாகும்.
 • திடீர் அதிர்ஷ்டம் புதையல் உண்டாகும்.
 • ரகசிய செயல்கள் செய்யத் தூண்டும்.
 • இயற்கை சீற்றத்தால் பாதிப்பு உண்டாகும்.

ஒன்பதாம் இடம் அல்லது ஒன்பதாம் அதிபதி மேல் கோச்சார ராகு

 • தந்தையைப் பற்றிய கேள்வி உண்டாகும்.
 • தந்தையின் ஆரோக்கியம் பற்றி கேள்வி உண்டாகும்.
 • தந்தைக்கு இடமாற்றம் உண்டாகும்.
 • தந்தைக்கு எக்ஸ்பிரஸ் ஸ்கேன் எடுத்து பார்ப்பது உண்டாகும்.
 • தந்தைக்கு தீய பழக்கம் உண்டாகும் அல்லது தீய பழக்கத்தில் இருந்து விடுபடுவார்.
 • தந்தை வெளிநாடு செல்வார்.

ஜாதகருக்கு உண்டாகும் பலன்கள்

 • ஆன்மீக நாட்டம் உண்டாகும்.
 • கோவில் தரிசனம் உண்டாகும்.
 • குருமார்கள் மாறுவார்கள்.
 • மேற்கல்வி யோகம்/ PhD/ ஆன்மீகம்/ ஜோதிட கல்வி உண்டாகும்.
 • நீண்ட தூரம் செல்வார்கள்.
 • புனித யாத்திரை செல்வார்கள் காசி ராமேஸ்வரம் தனுஷ்கோடி போன்ற இடங்களுக்கு செல்வார்கள்.
 • ஆஞ்சநேயர் வழிபாடு உண்டாகும். ராமர் படம் வரும்.
 • மத குருமார்களை சந்திப்பார்கள்.
 • துளசி மாலை அணிவார்கள், ரட்சைகள் கட்டுவார்கள்.
 • ஆன்மீக புத்தகங்கள் வாங்குவார்கள்.
 • மனித நேயம் அதிகரிக்கும்.
 • ஒன்பதாம் அதிபதியும் குருவும் பலம் குறைந்தால் மதமாற்றத்தை தூண்டும்.
 • இரண்டாம் திருமணத்தை பற்றிய கேள்விகளும்.
 • மனைவியின் சகோதர சகோதரிகளை பற்றிய கேள்விகள் எழும்.
 • அவர்களிடம் மாற்றம் அடைவார்கள் அல்லது உடல் நிலையை பிரச்சனைகள் உண்டாகும்.
 • மந்திரம் ஜெபம் ஹோமங்கள் செய்வார்கள்.
 • கௌரவம் கிடைக்கும்.
 • மூன்றாவது குழந்தையைப் பற்றிய கேள்வி எழும்.
 • ஒன்பதாம் அதிபதி அமர்ந்த வீட்டை பற்றிய கேள்வி உண்டாகும்.
 • ஜாதக தந்தையாகும் பாக்கியம் உண்டாகும்.

பத்தாமிடம் அல்லது பத்தாம் அதிபதி மேல் கோச்சார ராகு

 • தொழில் பற்றிய கேள்வி உண்டாகும்.
 • தொழில் இல்லாதவர்கள் தொழில் பற்றிய கேள்விகள் எழுதுவார்கள்.
 • தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் மாற்றம் அல்லது இடமாற்றம் அல்லது அபிவிருத்தி அல்லது வெளிநாட்டு தொடர்புடைய தொழில் பற்றிய கேள்விகள் எழும்.
 • உறவில் அல்லது குடும்பத்தில் ஒரு கர்மம் நடக்கும்.
 • சில நேரங்களில் ஜாதகருக்கு கர்மம் உண்டாகும்.
 • தொழிலுக்கான பயணம் அமையும்.
 • ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்கள் அமையும்.
 • தேவையில்லாத பயம் உண்டாகும்.
 • ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.
 • திருமண சுகம் குறையும்.
 • மனைவி பெயரின் சொத்து உண்டாகும். மனைவி ஊரில் சொத்து உண்டாகும்.
 • மாமியாருக்கு உடல்நல குறை உண்டாகும் அல்லது கண்டம் உண்டாகும்.
 • புதிதாக அன்னதானம் செய்வார்கள் ஏற்கனவே தானம் கொடுத்தால் அதை நிறுத்தி விடுவார்கள்.
 • தொழில் செய்யும் இடத்திற்கு பாம்பு வரும்.

11 ஆம் இடம் அல்லது 11 ஆம் அதிபதி மேல் கோச்சார ராகு

 • லாப நோக்க மிக அதிகமாக இருக்கும் அபரிவிதமான லாபம் எதிர்பார்ப்பார்கள்.
 • எதிர்கால திட்டம் மிக அதிகமாக இருக்கும்.
 • புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும் பழைய நண்பர்கள் விலகுவார்கள்.
 • பெண் நண்பர்கள் சேர்க்கை உண்டாகும்.
 • இரண்டாம் இடம் ஆகிய வருமானத்தைப் பற்றிய கேள்வி எழும்.
 • மருமகன் மருமகள் பற்றிய கேள்வி உண்டாகும்.
 • சித்தப்பாவுக்கு இடமாற்றம் அல்லது ஆரோக்கிய குறைவு உண்டாகும்.
 • ஆராய்ச்சி கல்வி பற்றிய முயற்சிகள் செய்வார்கள்.
 • கடலை முழுவதுமாக அடைத்து ரொக்க இருப்பு வைக்க திட்டம் தீட்டுவார்கள்.
 • கால்களில் ரத்த காயம் உண்டாகும்.
 • 11 ஆம் இடம் பாதகஸ்தானம் ஆனால் வேற்று மத நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். அதில் சுப கிரகம் இருந்தாலும் பார்த்தாலும் உயர்வான வாழ்க்கை உண்டாகும்.
 • ஒன்றுக்கு மேற்பட்ட வருமானம் உண்டாகும்.
 • தீய பழக்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • வழக்கில் வெற்றி கிட்டும் அல்லது வழக்கு தொடங்க வெற்றி கிட்டும்.
 • அரியஸ் பரீட்சை எழுத வெற்றி கிட்டும்.

பனிரெண்டாம் இடம் அல்லது 12 ஆம் அதிபதி மீது கோச்சார ராகு

 • ஜாதகர் காணாமல் போகுதல்.
 • வெளிநாடு அல்லது வெளி மாநிலம் செல்லுதல்.
 • கப்பல்கள் தொலைத்தல் அல்லது மாற்றுதல்.
 • ஏலாமிடம் சம்பந்தம் திருமணம் மண்டபம் கல்யாண வீடு.
 • 5 மற்றும் ஒன்பதாம் இடம் சம்பந்தம் கோவில்கள் ஆன்மீக ஸ்தலங்கள்.
 • பன்னிரண்டாம் இடம் சம்பந்தம் மருத்துவமனை, கர்மவீடு. ஆறாம் இட சம்பந்தம் நீதிமன்றம். ஏலாமிடம் சம்பந்தம் வர்த்தக நிறுவனங்கள்.
 • மருத்துவ செலவு உண்டாகும் அல்லது மருத்துவம் படிப்பார்கள்.
 • பெண் ஜாதகருக்கு கொலுசு தொலைந்து போகும் அல்லது மாற்றுவார்கள் கால் மெட்டி மாற்றுவார்கள்.
 • கால்களில் பித்தவெடிப்பு உண்டாகும்.
 • வெளிநாட்டு குடியுரிமை பற்றிய கேள்வி உண்டாகும்.
 • மருத்துவமனையில் வேலை வாய்ப்பு அமையும்.
 • கால் பாதங்களில் காயம் உண்டாகும்.
 • நாய்க்கறி உண்டாகும் இரவு நேரங்களில் நாய் கடிக்கும்.
 • விமான பயணம் உண்டாகும்.
 • சிறைவாசம் உண்டாகும்.
 • ஒளிந்து மறைந்து வாழுதல் உண்டாக.
 • பயணம் அதிகம் உண்டாகும் பயணம் செய்ய தவறினால் வேறு துன்பம் உண்டாகும்.
 • ஒரு கர்ம நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
 • தூக்கம் அதிகரிக்கும் அல்லது தூக்கம் கெடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *