வணிசை கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

 • ✓ வளர்பிறையில் – பசு
 • தேய்பிறையில் – எருது
 • ✓ தேவதை – ஸ்ரீதேவி
 • ✓ கிரகம் – சூரியன்
 • ✓ ராசி – ரிஷபம்
 • ✓ ஸ்தலம் –  திருமலைபாடி
 • ✓ மலர் நீலோற்பவ மலர், நீல சங்கு பூவைக் கூட பயன்படுத்தலாம்
 • ✓ வருடம் – 12 வருடம்
 • ✓ஆகாரம் – தயிர்
 • ✓ தானம் – வஸ்திர தானம்
 • ✓ பூசும் பொருள் – மஞ்சள்
 • ✓ ஆபரணம் –  வித்ரூபம் ( பவளம்)
 • ✓ தூபம் – சங்குப் பொடி
 • ✓ வஸ்திரம் – கம்பிலி
 • ✓ உலோகம் – பஞ்சலோகம்

வணிசை கர்ணத்தில் செய்யத் தக்கவை

 • ✓எல்லாவிதமான சுப காரியங்களும் வரிசை கர்ணத்தில் செய்யலாம்
 • ✓ பொதுவாக இவர்கள் புகழ், கீர்த்தி படைத்தவர்கள்
 • ✓ வியாபார நுணுக்கம் அறிந்தவர்கள்
 • ✓ தயாள குணம்
 • ✓ தர்ம சிந்தனை உடையவர்கள்
 • ✓ வெள்ளை நிற ஆடை என்று அணிகிறார்களோ அன்று முதல் இவர்களுக்கு யோகம் தரும்
 • ✓ வணிசை கரண நேரத்தில் செல்வம் சம்பந்தமான விஷயத்திற்கு ஏற்றது. டிரேடிங் பிசினஸ், புதிதாக ஒன்றை துவங்குவது, ஒருவரிடம் பேசுவதற்கு, அக்ரிமெண்ட் (Agreement) போடுவதற்கு, தொழில் வளம் பெறுவதற்கு ✓வணிசை கரணம் ஆரம்பிக்கும் நேரத்தில் உள்ள லக்னாதிபதியை வணங்கி செயலைத் தொடங்க மிகப்பெரிய வெற்றியை தரும்
 • ✓ வணிசை கரண நேரத்தில் செல்வம் சம்பந்தமான விஷயத்திற்கு ஏற்றது. டிரேடிங் பிசினஸ், புதிதாக ஒன்றை துவங்குவது, ஒருவரிடம் பேசுவதற்கு, அக்ரிமெண்ட் (Agreement) போடுவதற்கு, தொழில் வளம் பெறுவதற்கு
 • ✓வணிசை கரணம் ஆரம்பிக்கும் நேரத்தில் உள்ள லக்னாதிபதியை வணங்கி செயலைத் தொடங்க மிகப்பெரிய வெற்றியை தரும்
 • ரத்தின கற்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு வணிசை கரணம் மிக சிறப்பானது

குணாதிசயங்கள்

 • தனது மனதில் உள்ளதை உடனுக்குடன் வெளிப்படுத்தும் குணம் உள்ளவர்கள்
 • உணவு விஷயத்தில் அசைவமாக இருந்து சைவத்திற்கு மாறி மீண்டும் அசைவத்திற்கு மாறுவார்கள்
 • குலதெய்வம் சார்ந்த விஷயத்தில் ஒரு திருப்தி இருக்காது. அது சம்பந்தப்பட்ட ஒரு சந்தேகம் அதற்காக அனைவரும் இருக்கும்
 • வீட்டில் இரண்டு மூன்று வாகனங்கள் நிற்கும்
 • நிறைய தகவல்கள் சேமிப்பார், நிறைய புத்தகம் வாங்குபவர்
 • எதையும் குறைவாக கொடுத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
 • நிறைய எதிர்பார்ப்பார்கள் அப்போதுதான் திருப்தி ஏற்படும்
 • இவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் தவறினால் உடல் ரீதியில் நோய் வரும்
 • மருமகன் மருமகள் விஷயத்தில் தொந்தரவு தரும்
 • மருத்துவம் போலீசு ராணுவம் சார்ந்த துறையில் உள்ளவர் குடும்பத்தில் இருப்பார்
 • இந்த கரணத்தில் பெண் பிறந்தால் யோகம் உடையவர்கள்
 • வாகனத் துறை சிறப்பு ஆசிரியர் துறை சிறப்பு
 • எதையும் ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையவர்கள்

பரிகாரம்

 • சூரிய உதய நேரத்தில் காயத்ரி ஜபம் செய்வது மிக மிக நல்லது
 • எந்த செயல் செய்தாலும் தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்கி செய்வது இவர்களுக்கு வெற்றியை தரும்
 • வணிசை கரணம் ஆரம்பிக்கும் நேரத்தில் உள்ள லக்னாதிபதியை வணங்கி செயலைத் தொடங்க மிகப்பெரிய வெற்றியை தரும்
 • வெண்மை நிற ஆடையை அணிய ஆரம்பித்தால் அன்று முதல் உயர்வு தரும் காலமாக மாறும்
 • திருநீறு அணிந்து சென்றால் நன்மை தரும்
 • முக்கியமான விஷயத்திற்காக வெளியில் செல்லும் பொழுது அல்லது வணிசையன்று தயிர் சாப்பிட்டு கையில் விரலி மஞ்சள் வைத்துக் கொள்ள வேண்டும்
 • சூரியன் அமர்ந்த மாதத்தில் திருவண்ணாமலை கிரிவலம் சென்று வருவது சிறப்பை தரும்
 • சிவபெருமான் வழிபாடு சிறப்பு
 • பிரதோஷ வழிபாடு நன்மை தரும்
 • மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்
 • குலதெய்வ வழிபாடு நன்மை தரும்

ஸ்தலங்கள்

 • காளையார் கோவில் வழிபாடு நன்மை
 • திருமலை பாடி கோவில் சிறப்பு
 • தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் சிறப்பு
 • சூரியனார் கோவில் வழிபாடு சிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *