ராசிகளின் மீது கோச்சார ராகு பயணம்

கோச்சார பலன் ராகு

ராகு சந்திரன் நின்ற ராசிக்கு வரும்போது உங்களின் ராசியில் ராகு நிற்க்கும் போது நீங்கள் தொடங்கும் எந்த ஒரு சிறிய காரியமும் தடைபடும். கெட்ட பெயர் ஏற்படும். கவலை தரும் நிகழ்வுகள் ஏற்படும். உங்களின் உறவினர்களுடன் சச்சரவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். உங்களின் பூர்வபுண்ணியத்தால் ஆதரவு வார்த்தை சொல்லுபவர்கள் இருப்பார்கள் அதனை வைத்து நீங்கள் முன்னேற்றம் அடையலாம்.

ராகு இரண்டாமிடத்திற்க்கு வரும்போது புகழ் செல்வம் செல்வாக்கு கிடைக்கும். தானம் செய்வதற்க்கு உங்களின் மனம் ஈடுபடும். சாப்பிடும் விசயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

ராகு மூன்றாம் இடத்திற்க்கு வரும்போது நல்ல தைரியம் ஏற்படும். அடிக்கடி அலைச்சலை ஏற்படுத்தும். பணத்தட்டுப்பாடு ஏற்படும். கமிஷன் தொழில் லாபம் ஏற்படாது. காதில் பிரச்சினை ஏற்படுத்தும். உங்களின் துணைவரின் உடல்நிலை பாதிக்கசெய்யும்.

ராகு நான்காமிடத்திற்க்கு வரும்போது வீட்டில் அடிக்கடி விஷஜந்துக்கள் வரும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் நல்லமுறையில் இருக்கும். பெரியோர்களின் ஆதரவு இருக்கும். வீட்டில் உள்ள கால்நடை ஜீவன்களுக்கு மருத்துவ செலவு ஏற்படும்.

ராகு ஐந்தாமிடத்திற்கு வரும்போது எதிர்பாராத பணவரவு வரும். நீங்கள் செய்கின்ற தொழிலில் நல்ல வருமானம் வரும். நுண்ணறிவை காட்டும் இடம் என்பதால் முடிவு எடுக்கமுடியாத நிலை ஏற்படும். வம்பு வழக்குகள் வரும். கணவன் மனைவி உறவுகள் நல்லவிதமாக இருக்காது.

ராகு ஆறாம் இடத்திற்க்கு வரும்போது குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் எடுத்த அனைத்து காரியங்களும் வெற்றி வரும். உங்களின் எதிராளி அடங்கி போவார்கள். உங்களின் துணைவர் ஆதரவாக நடந்துக்கொள்வார். விழாக்கள் கொண்டாடங்களில் ஈடுபட மனம் துடிக்கும்.

ராகு ஏழாமிடத்திற்க்கு வரும்போது துணைவர் வழியாக பிரச்சினை ஏற்படும். உடல்நிலை பிரச்சினை ஏற்படும். கூட்டுத்தொழில் பிரச்சினை ஏற்படும். அடிக்கடி பயணம் ஏற்படும்.வீண் செலவு ஏற்படும்.

ராகு எட்டாமிடத்திற்க்கு வரும்போது திடீர் விபத்துக்கள் ஏற்படும். உங்களை சுற்றி சதிவலை ஏற்படும் அதனை நீ்ங்கள் போக்குவதற்க்கு பெரும்பாடுபடவேண்டிவரும். பணம் கிடைக்காது அன்றாட செலவுக்கு கூட அடுத்தவர்களை நீங்கள் நம்பி இருக்கவேண்டிவரும்.

ராகு ஒன்பதாவது இடத்திற்க்கு வரும்போது தந்தைவழி உறவினர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. மேலாதிகாரிகளிடம் பணிவாக நடந்துக்கொள்ளவேண்டும் அப்படி இல்லை என்றால் அவர்களின் கோபத்திற்க்கு ஆளாக வேண்டிவரும்.

ராகு பத்தாமிடத்திற்க்கு வரும்போது தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர வழியில் மனம் ஈடுபடவைக்கும். பணவரவு நன்றாக இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். வேலை செய்யும் இடங்களில் உயர் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.

ராகு பதினொன்றாமிடத்திற்க்கு வரும்போது தொழில் சிறக்கும். தொழிலில் வருமானம் வரும். திடீர் பணவரவு இருக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உங்களின் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இரு்க்கும். வீட்டில் சந்தோஷம் இருக்கும்.

ராகு பனிரெண்டாம் இடத்திற்க்கு வரும்போது வீண் செலவு வரும். மருத்துவமனை செலவு ஏற்படும். செய்கின்ற தொழிலில் பிரச்சினை ஏற்படும். அனைத்து செயல்களிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் பிரச்சினை ஏற்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *