சனி பெயர்ச்சி பரிகாரங்கள் – 2023

சனி பெயர்ச்சி பரிகாரங்கள் – 2023
சனிப்பெயர்ச்சி நாள் : 17-01-2023
நேரம் : 05.05 Pm

ராசி : மேஷம் சனி தேவரின் நாமம்: லாப சனி

எளிய பரிகாரங்கள்
1) சனிக்கிழமை தயிர் சாதம் தானம் தருவது நல்லது
2) விநாயகர் மற்றும் காலபைரவர் வழிபாடு
3) ஸ்ரீரங்கம், திருப்பதி சென்று வழிபாடு செய்தால் தொழில் லாபம் அதிகரிக்கும்

ராசி – ரிஷபம் சனி தேவரின் நாமம்: கர்ம சனி

எளிய பரிகாரங்கள்

1) சனிக்கிழமை கோவில் வளாகத்தை சுத்தம் செய்தல் நல்லது.
2) தினமும் முன்னோர்களை நினைத்து பிரார்த்தனை செய்தல் காரியங்கள் சுபம்.
3) வெள்ளிக்கிழமை துர்க்கை மற்றும் மகாலட்சுமி வழிபாடு சிறப்பு தரும்

ராசி : மிதுனம் சனி தேவரின் நாமம் : பாக்கிய சனி

எளிய பரிகாரங்கள்

1) திங்கட்கிழமை சிவபெருமான் வழிபாடு செய்தல் நன்று
2) திருநள்ளாறு அல்லது குச்சனூர் சென்று வழிபாடு செய்து வரவும்
3) தயிர் சாதத்தில் என் கலந்து காக்கைக்கு கொழுத்து வரவும்

ராசி : கடகம் சனி தேவரின் நாமம் : அஷ்டம சனி

எளிய பரிகாரங்கள்

1) ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றி வழிபாடு செய்தல் நன்மை
2) தேய்பிறை அஷ்டமியில் காலபைரவர் வழிபாடு செய்வது நன்மை தரும்.
3) ஏழையின் ஈம காரியத்துக்கு உதவி செய்யவும்

ராசி: சிம்மம் சனி தேவனின் நாமம் : கண்டக சனி

எளிய பரிகாரங்கள்

1) சனிக்கிழமை கடுகு எண்ணெய் தானம் கொடுத்து பின் சாப்பிடவும்
2) சனி காயத்ரி மந்திரம் தினமும் 9 முறை பாராயணம் செய்தல் நன்மை தரும்
3) ஏழைகளுக்கு திருமண உதவி செய்யவும்.

ராசி : கன்னி சனி தேவரின் நாமம் : ரோக சனி

எளிய பரிகாரங்கள்

1) தங்களுக்கு வேலை செய்பவர்களுக்கு புதிய துணி தானம் செய்யவும்
2) நாக தெய்வங்கள்/ ராகு கேது வழிபாடு தேக ஆரோக்கியம் தரும்
3) தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ செலவிற்கு உதவும்.

ராசி : துலாம் சனி தேவரின் நாமம் : பஞ்சம சனி

எளிய பரிகாரங்கள்

1) ஆஞ்சநேயருக்கு விரதம் இருந்து சனி காயத்ரி மந்திரம் பாராயணம் செய்யவும்
2) சங்கடஹர சதுர்த்தியின் விநாயகர் வழிபாடு செய்து சுண்டல் பிரசாதம் தருவோம்
3) கோவில் திருப்பணி வேலைக்கு பொருள் உதவி செய்யவும்

ராசி : விருச்சகம் சனி தேவரின் நாமம் : அர்த்தாஷ்டம சனி

எளிய பரிகாரங்கள்

1) துளசி செடி வீட்டில் வைத்து வழிபாடு செய்யவும்
2) சனி ஹோரையில் என் தீபம் ஏற்றி வழிபடவும்
3) வைத்தீஸ்வரன் கோவில் சென்று செவ்வாய் பகவானை வணங்கி அன்னதானம் செய்து வர வீட்டின் சூழல் சிறப்பாக அமையும்

ராசி : தனுசு சனி தேவரின் நாமம் : சகாய சனி

எளிய பரிகாரங்கள்

1) இனிப்பு, மாவு, சக்கரை போன்றவை எறும்புக்கு உணவாக தரவும்
2) நரசிம்மருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடவும்
3) திருநள்ளாறு மற்றும் பிள்ளையார்பட்டி சென்று வழிபாடு செய்து வரவும்.

ராசி : மகரம் சனி தேவரின் நாமம் : பாத சனி

எளிய பரிகாரங்கள்

1) சனிக்கிழமை வயதானவர்களுக்கு வயிறு நிறைய உணவு தருவோம்
2) திருச்செந்தூர் கோவில் சென்று வழிபாடு செய்து வரவும்
3) ஜீவசமாதி அடைந்த யோகிகளை வழிபாடு செய்தல் சிறப்பு தரும்

ராசி : கும்பம் சனி தேவரின் நாமம் : ஜென்ம சனி

எளிய பரிகாரங்கள்

1) சனீஸ்வரர் கோவிலில் ஓம் ஸ்ரீ சனீஸ்வராய நம 108 முறை சொல்லவும்
2) பழனி முருகன் சென்று வர தடைகள் நீங்கும்
3) உடல் ஊனமுற்றோருக்கு உணவு மருத்துவ உதவி செய்யவும்

ராசி : மீனம் சனி தேவரின் நாமம் : விரைய சனி

எளிய பரிகாரங்கள்

1) உறவினர்கள் இல்லாமல் உயிர் நீத்தோருக்கு ஈம காரியங்கள் செய்தல் சிறப்பு
2) முதியோர் இல்லங்களில் அன்னதானம் செய்யவும்
3) உடல் ஊனமுற்றோர், விதவைகள் ஆகியோருக்கு உதவி செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *