கோசாரப் பலன்கள்

கோள்களின் சஞ்சாரம் – கோள்களின் சாரம் – கோசாரம் என மருவியது. கோசார ரீதியில் நவகிரகங்கள் அளிக்கும் பலா பலன்களை ஆராய்வோம். ஒரு குறிப்பிட்ட வருஷம், மாதம், தேதியில் குறிபிட்ட கிரகம் எந்த ராசியில் சஞ்சரிகின்றார் என்பதை பஞ்சாங்கத்தை கொண்டு அறியலாம். அவ்வாறு அந்த கிரகம் சஞ்சரிக்கும் ராசியானது சந்திர லக்கினம் (சந்திரன் நிற்கும் வீடு) முதல் எத்தனையாவது வீடு என்பதை எண்ணிப் பார்த்து அந்த எண்ணிக்கைக்கு தக்கபடி பலன்களை நிர்ணயிப்பது கோசாரப்பலன் நிர்ணயம் ஆகும். கோசாரத்தில் 9 கிரகங்களும் 9 வகையான பலன்களை கொடுக்கும். அவற்றுள் சுப பலன் எவை அசுப பலன் எவை என இனம் பிரித்து கோசாரப் பலன்களை சொல்ல வேண்டும். கோசார ரீதியாக ஒருவருக்கு நல்ல காலமாய் இருந்தாலும் அவரது தசா புத்திகள் அசுபமானதாக இருந்தால் ஜாதகருக்கு சுப பலன்கள் நடைபெறாது. அதுபோல கோசார ரீதியில் ஒருவருக்கு கெட்ட காலமாய் இருந்தாலும், தசா புத்திகள் சுபமானவைகளாக இருந்தால் ஜாதகருக்கு அசுப பலன்கள் நடைபெறாது. கோசாரம்,தசா புத்தி இவற்றில் தசா புத்திகளே பலம் வாய்ந்தது. பொதுவாக ஒரு ராசியில் ஒரு கிரகம் எவ்வளவு காலம் சஞ்சரிப்பார் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.

சூரியன் ஒரு ராசியில் 1 மாத காலம் சஞ்சரிப்பார்
சந்திரன் ஒரு ராசியில் 2¼ நாள் காலம் சஞ்சரிப்பார்
செவ்வாய் ஒரு ராசியில் 1½ மாத காலம் சஞ்சரிப்பார்
புதன் ஒரு ராசியில் 1 மாத காலம் சஞ்சரிப்பார்
குரு ஒரு ராசியில் 1 வருட காலம் சஞ்சரிப்பார்
சுக்கிரன் ஒரு ராசியில் 1 மாத காலம் சஞ்சரிப்பார்
சனி ஒரு ராசியில் 2½ வருட காலம் சஞ்சரிப்பார்
ராகு / கேது ஒரு ராசியில் 1½ காலம் சஞ்சரிப்பார்


ஒரு வருஷத்தின் பொதுவான பலன்களை சனி, ராகு, கேது, குரு இவர்களின் சஞ்சாரங்களை கொண்டும், ஒரு மாதத்தின் பொதுவான பலன்களை சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் இவர்களின் சஞ்சாரங்களை கொண்டும், ஒரு நாளின் பொதுவான பலன்களை சந்திரனின் சஞ்சாரத்தை கொண்டும் தெரிந்து கொள்ள வேண்டும்.


சூரியனும், செவ்வாயும் ஒரு ராசியில் முற்பகுதியில் சஞ்சாரம் செய்யும் பொழுதே தான் கொடுக்க வேண்டிய பலன்களை கொடுத்து விடுவார்கள்.
சனி, ராகு, கேதுகள் ஒரு ராசியின் பிற்பகுதியில் சஞ்சாரம் செய்யும் பொழுது தான் தாம் கொடுக்க வேண்டிய பலன்களை கொடுப்பார்கள்.
புதனும், சுக்கிரனும் ஒரு ராசியின் நடுபகுதியில் சஞ்சாரம் செய்யும் பொழுது தான் தாம் கொடுக்க வேண்டிய பலன்களை கொடுப்பார்கள்.
சந்திரனும், குருவும் ஒரு ராசியின் முற்பகுதியில் சஞ்சாரம் செய்யும் பொழுது தான் தாம் கொடுக்க வேண்டிய பலன்களை கொடுப்பார்கள்.
சரி இனி கிரகங்களின் கோசாரப்பலன்களை காண்போம்.

சூரியனின் கோசாரப் பலன்

 • சூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 1ல் இருந்தால் தன விரயம், கௌரவ குறைவு ஏற்படும்.
 • சூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 2ல் இருந்தால் பிறரால் வஞ்சிக்கப்படுதல், கண் நோய் ஏற்படும்
 • சூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 3ல் இருந்தால் புதிய பதவி, சத்ரு நாசம், தேக ஆரோக்கியம் ஏற்படும்.
 • சூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 4ல் இருந்தால் பிணியால் கவலை, புலன் இன்பத்தில் மகிழ்ச்சி இன்மை ஏற்படும்.
 • சூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 5ல் இருந்தால் நோயினாலும், விரோதியினாலும் துன்பம் ஏற்படும்
 • சூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 6ல் இருந்தால் நோய்கள் விலகும், கவலைகள் நீங்கும், விரோதிகள் மறைவர்
 • சூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 7ல் இருந்தால் அலைச்சல், வயிற்றுவலி, தாழ்நிலை ஏற்படும்.
 • சூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 8ல் இருந்தால் நோய், வீண்பயம், மனைவியிடம் சண்டை ஏற்படும்
 • சூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 9ல் இருந்தால் நிம்மதியின்மை, கௌரவ குறைவு, பணத்தால் பகை, நோய் உண்டாகும்.
 • சூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 1௦ல் இருந்தால் காரிய வெற்றி, எதிரிகள் அஞ்சும்படியான வீர செயல் புரிவர்.
 • சூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 11ல் இருந்தால் வெற்றியால் மரியாதை, தன சேர்கை, நோய் விலகும்.
 • சூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 12ல் இருந்தால் நல்ல முயற்சிகளில் வெற்றி தீய முயற்சிகளில் தோல்வி உண்டாகும்.

சந்திரனின் கோசாரப் பலன்

 • சந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 1ல் இருந்தால் நல்ல உணவு, படுக்கை வசதி, புத்தாடைகள் கிடைக்கும்
 • சந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 2ல் இருந்தால் தன விரயம், மதிப்பு குறைவு, காரியத் தடை ஏற்படும்
 • சந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 3ல் இருந்தால் புத்தாடைகள், இன்பசுகம், முயற்சியில் வெற்றி கிடைக்கும்
 • சந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 4ல் இருந்தால் துணிவின்மை, யாரையும் நம்பாமல் தவிப்பார்
 • சந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 5ல் இருந்தால் தாழ்வுநிலை, நோயும் கவலையும், பிரயானதடையும் அமையும்.
 • சந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 6ல் இருந்தால் தனலாபம், சுகவாழ்வு, நோயின்மை, பகைவர்கள் மறைவு ஏற்படும்
 • சந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 7ல் இருந்தால் வாகனவசதி பெருகும், கௌரவம் உண்டாகும், பணவரவு, நல்ல உணவு கிட்டும்.
 • சந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 8ல் இருந்தால் எதிர்பாராத பயம், நோய்கள் உண்டாகும். பசித்த வேளைக்கு தானாகவே உணவு கிட்டும்.
 • சந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 9ல் இருந்தால் எதாவது ஒரு கட்டுப்பாடு, மனதிற்குள் அச்சம், கடின உழைப்பு, வயிற்று வலி உண்டாகும்.
 • சந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 1௦ல் இருந்தால் முயற்சியில் வெற்றி, பணியாட்கள் கீழ்ப்படிதல் உண்டாகும்.
 • சந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 11ல் இருந்தால் மனமகிழ்ச்சி, நண்பர்கள் சந்திப்பு உண்டாகும்
 • சந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 12ல் இருந்தால் பணவிரயம், கர்வம் உண்டாகும். அதனால் அழிவு உண்டாகும்.

செவ்வாய் கோசாரப் பலன்

 • செவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 1ல் இருந்தால் மனகஷ்டம், எல்லா வகையிலும் தொல்லை ஏற்பாடும்
 • செவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 2ல் இருந்தால் அரசாங்கம், விரோதிகள் ஆகியவற்றால் தொல்லை, சண்டை சச்சரவுகள், பித்த நோய், திருடர்கள், நெருப்பு ஆகியவற்றால் தீங்குகள் நேரும்
 • செவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 3ல் இருந்தால் செல்வம் பெருகும், தேகசுகம் கிட்டும், அதிகாரப்பதவி, நிலபுலன் சேர்க்கை ஏற்படும்.
 • செவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 4ல் இருந்தால் ஜுரம், வயிறுவலி, விரும்பாமலேயே தீயவர் சேர்கை அதனால் இன்னல் ஏற்படும்.
 • செவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 5ல் இருந்தால் பிள்ளைகளால் தொல்லை, விரோதிகளால் இடையூறு, கோபம், பயம், பிணி உண்டாகும், உடல் அழகு குறையும்
 • செவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 6ல் இருந்தால் பகை விலகும், சமாதானம் உண்டாகும், தனசேற்கை உண்டாகும்.
 • செவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 7ல் இருந்தால் மனைவியால் சண்டை, கண்நோய், வயிற்றுவலி உண்டாகும்.
 • செவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 8ல் இருந்தால் ரத்த சேதம் உண்டாகும். கௌரவம் பறிபோகும்.
 • செவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 9ல் இருந்தால் உடல் பலவீனம், அவமானம், தனவிரயம், அலைச்சல், நடமாடுவதில் விருப்பமின்மை
 • செவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 1௦ல் இருந்தால் நன்மை, தீமை ஏதும் இல்லை. செய்யும் தொழிலில் கடுமையான உழைப்பு
 • செவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 11ல் இருந்தால் காரிய வெற்றி, அளவற்ற பொருள் வரவு, சமுகத்தில் உயர்ந்த நிலை
 • செவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 12ல் இருந்தால் அளவிட முடியாத தொல்லை,வீண் செலவுகள், கண்வலி, பித்தரோகம், பெண்களால் தொல்லை

புதனின் கோசாரப் பலன்

 • புதன், சந்திர லக்னத்தில் இருந்து 1ல் இருந்தால் தனவிரயம், வீண்பழி, கட்டுப்பாடு, ஊர் சுற்றுதல் ஏற்படும்.
 • புதன், சந்திர லக்னத்தில் இருந்து 2ல் இருந்தால் கௌரவ குறைவு, பணதட்டுபாடு உண்டாகும்.
 • புதன், சந்திர லக்னத்தில் இருந்து 3ல் இருந்தால் புதிய நண்பர்கள், தகாத செயல் அதனால் பயம் ஏற்படும்
 • புதன், சந்திர லக்னத்தில் இருந்து 4ல் இருந்தால் நல்ல பணவரவு, குடும்ப மேன்மை, உறவினரின் தொடர்பு ஏற்படும்
 • புதன், சந்திர லக்னத்தில் இருந்து 5ல் இருந்தால் மனைவி மக்களிடம் பகை, கைக்கு எட்டிய இன்ப சுகம் வாய்க்கு எட்டாது.
 • புதன், சந்திர லக்னத்தில் இருந்து 6ல் இருந்தால் செல்வாக்கு பெருகும், காரிய வெற்றி கிடைக்கும்
 • புதன், சந்திர லக்னத்தில் இருந்து 7ல் இருந்தால் சண்டை சச்சரவுகள், உடல் பலவீனம், பேராசைகளும்,அதனால் இடையூறுகளும் உண்டாகும்.
 • புதன், சந்திர லக்னத்தில் இருந்து 8ல் இருந்தால் காரிய வெற்றி, தனலாபம், புத்திரலாபம், புத்தாடை பாக்கியம், கல்வி கேள்விகளில் நுட்பம், பலருக்கும் உதவும் வாய்ப்பு கிட்டும்.
 • புதன், சந்திர லக்னத்தில் இருந்து 9ல் இருந்தால் காரியத்தடை, வீண்பழி, தீராப்பகை, அலைச்சல் ஏற்படும்
 • புதன், சந்திர லக்னத்தில் இருந்து 1௦ல் இருந்தால் சத்ரு நாசம், அதிகப் பணவரவு, இன்ப சுகம், மனமகிழ்ச்சி, வினோதமான விளையாட்டுகளில் ஈடுபடுதல்.
 • புதன், சந்திர லக்னத்தில் இருந்து 11ல் இருந்தால் புத்திரர்களாலும், இளம் மங்கைகளாலும் லாபம் உண்டாகும். சுகவாழ்வு, நண்பர்கள் சேர்கை, தாரள தனவரவு மகிழ்ச்சி உண்டாகும்.
 • புதன், சந்திர லக்னத்தில் இருந்து 12ல் இருந்தால் பகைவராலும், நோய்களாலும் துன்பம் உண்டாகும்.

குருவின் கோசாரப் பலன்

 • குரு, சந்திர லக்னத்தில் இருந்து 1ல் இருந்தால் மனைவி மக்களை விட்டு பிரிதல், பொருள் வரவில் தடை, பதவியிழத்தல் ஏற்படும்
 • குரு, சந்திர லக்னத்தில் இருந்து 2ல் இருந்தால் சாதாரண தன பெருக்கம், பகைவர்கள் இருக்கமாட்டார்கள். மட்டற்ற குடும்ப சுகம் கிடைக்கும்,
 • குரு, சந்திர லக்னத்தில் இருந்து 3ல் இருந்தால் உத்தியோகதிற்க்கு ஆபத்து, வீடு வாசல் இழந்து ஊரை விட்டு வெளியேறலாம். மதிப்பு குறையும். மனோசஞ்சலம், காரியத்தடை ஏற்படும்.
 • குரு, சந்திர லக்னத்தில் இருந்து 4ல் இருந்தால் உற்றார், நண்பர், பகைவர், மனதில் குழப்பம் மிஞ்சும். வீட்டில் இருந்தாலும், காட்டில் இருந்தாலும் ஒன்றுதான். சுகம் அவரை தேடி வராது.
 • குரு, சந்திர லக்னத்தில் இருந்து 5ல் இருந்தால் குடும்பத்தில் சுபகாரியம் (திருமணம்) நடக்கும். புத்திர வரவு உண்டாகும். புதிய வீடு, வாகன சேர்க்கை உண்டாகும். ஆளடிமை, சேவகர் விருத்தி உண்டாகும். கல்வியில் தேர்ச்சி, உள்ளத்தில் ஊக்கம், ஏராளமான செல்வ சேர்கை, மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும்.
 • குரு, சந்திர லக்னத்தில் இருந்து 6ல் இருந்தால் கட்டிய மனைவி விரோதியாக மாறுவாள், எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்வு இருந்தாலும் அவனுக்கு எல்லாம் துன்பமாக தெரியும்.
 • குரு, சந்திர லக்னத்தில் இருந்து 7ல் இருந்தால் இன்ப வாழ்வு, தெளிந்த அறிவு, இனிமையான பேச்சு, தாரள பணவரவு ஏற்படும்.
 • குரு, சந்திர லக்னத்தில் இருந்து 8ல் இருந்தால் கட்டுப்பாடு, கவலை, நோய், பிரயாண பயம், உயிருக்கு ஆபத்து, காரியத்தில் இடையூறு ஏற்படும்.
 • குரு, சந்திர லக்னத்தில் இருந்து 9ல் இருந்தால் புதிய ஆராய்ச்சி, புத்திர பாக்கியம், விரும்பிய வண்ணம் காரிய வெற்றி, நிலபுலன் சேர்கை, இன்ப உறவுகள் (திருமணம்) ஏற்படும்.
 • குரு, சந்திர லக்னத்தில் இருந்து 1௦ல் இருந்தால் பதவி பறிபோகும். உடல்நலம் குறையும். கைப்பொருள் விரையம் ஆகும்.
 • குரு, சந்திர லக்னத்தில் இருந்து 11ல் இருந்தால் பறிபோன பதவி மீண்டும் கிடைக்கும். இழந்த பொருள் மீண்டும் வந்து சேரும். புதிய பொருளும் வந்து சேரும். உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
 • குரு, சந்திர லக்னத்தில் இருந்து 12ல் இருந்தால் தகாத வழியில் ஈடுபட்டு இன்னலுக்கு ஆளாவர்.

சுக்ரனின் கோசாரப் பலன்

 • சுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 1ல் இருந்தால் இன்ப அனுபவங்கள், அதற்கான வாய்புகள் ஏராளமாக உண்டாகும், புதிய பதவிகள், வாகன வசதிகள், மகப்பேறு, கல்வி செல்வம் உண்டாகும்.
 • சுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 2ல் இருந்தால் தாராளமான பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி, மகக்ட்பேறு, மனதிற்கிசைந்த இன்பங்கள் உண்டாகும்.
 • சுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 3ல் இருந்தால் புதிய பதவிகளும் அதிகாரங்களும் ஏற்படும். செல்வம் செல்வாக்கு பெருகும். சத்ரு நாசம் உண்டாகும்.
 • சுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 4ல் இருந்தால் பிரிந்த நண்பர்கள் சேருவார்கள். அளவற்ற ஆற்றல்களும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.
 • சுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 5ல் இருந்தால் அதிக மகிழ்ச்சி, மேலோர்கள் ஆசி, உறவினர், நண்பர்கள் நன்மை, மகப்பேறு, பொருட்பேறு உண்டாகும்.
 • சுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 6ல் இருந்தால் அவமானங்கள், நோய்கள், துன்பங்கள் ஆகியவை ஏற்படும்.
 • சுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 7ல் இருந்தால் பெண்களால் அவமானங்கள், கெடுதி, ஆபத்து ஏற்படும்
 • சுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 8ல் இருந்தால் புதிய வீடுவாசல், ஏவல் ஆட்கள், இன்ப உறவுகள் ஏற்படும்.
 • சுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 9ல் இருந்தால் ஏராளமான பொருள் வரவு கிட்டும். பல தான தருமங்களை செய்வர். மனைவி மக்களுடன் இன்ப வாழ்வு வாழ்வார்.
 • சுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 1௦ல் இருந்தால் சண்டை சச்சரவுகள், வம்பு வழக்குகள், அவமானத்திற்கு ஆளாவர்.
 • சுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 11ல் இருந்தால் நண்பர்கள் பெருக்கம், அடிக்கடி விசேஷ விருந்து உன்னல், எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பர்.
 • சுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 12ல் இருந்தால் இன்பகரமான வாழ்வு, ஆனால் சில உடைமைகள் விரயம் ஆகும்.

சனியின் கோசாரப் பலன்

 • சனி, சந்திர லக்னத்தில் இருந்து 1ல் இருந்தால் விஷ பயம், நெருப்பினால் அபாயம், நெருங்கிய பந்துகள் பிரிவு, பந்துகளுக்கு ஜாதகரால் அவமானம் நேரும். நண்பர்கள் பகைவர்களாக மாறும் நிலை, கெட்ட வழிகளில் பணத்தை செலவிடும் நிலை, சொந்த ஊரை விட்டு வெளியேறுதல், சிந்தனையில் சலனம், எப்பொழுதும் துன்பம் சூழும் கோலம் காணப்படும்.
 • சனி, சந்திர லக்னத்தில் இருந்து 2ல் இருந்தால் உடல் நலம் கேடுறும், தோற்றதில் பொலிவு இழப்பர், ஆற்றல் மங்கும், கர்வம் குறையும், நேர்மையாக தேடிய செல்வதையும் இழப்பர்.
 • சனி, சந்திர லக்னத்தில் இருந்து 3ல் இருந்தால் ஏராளமாக சம்பாதிப்பர். மண்ணை தொட்டாலும் பொன்னாகும். நோய் விலகி நலம் அடைவர். எவரை கண்டும் அஞ்சாத ஊக்கம் பிறக்கும். கடும் பகைவர்களையும் கணத்தில் வெற்றி காண்பர். புதிய வீடு, வாகனம், பதவி சுகம் கிடைக்கும்.
 • சனி, சந்திர லக்னத்தில் இருந்து 4ல் இருந்தால் குடும்பத்தை விட்டு விலகி இருத்தல், நண்பர்கள் பிரிவு, பொருள் விரயம், தீய வழியில் அறிவு செல்லும் அவல நிலை.
 • சனி, சந்திர லக்னத்தில் இருந்து 5ல் இருந்தால் புத்திரர்களுக்கு தொல்லை, குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள், பொருள் சேதம் உண்டாகும்.
 • சனி, சந்திர லக்னத்தில் இருந்து 6ல் இருந்தால் கொடிய நோய் நொடிகள் இருந்தாலும் அகன்று விடும். பகைவர்களும் பயந்து பணிவர் அல்லது நாசமாவர். எண்ணும் இன்பங்கள் எளிதில் கைகூடும். தனவசதி கிட்டும்.
 • சனி, சந்திர லக்னத்தில் இருந்து 7ல் இருந்தால் ஊர் ஊராக அலைவர்.கடின உழைப்பும், தொல்லையும் அடைவர். மனைவி மக்களால் வெறுக்கப்படுவர். அல்லது அவர்களை விட்டு பிரிவர்.
 • சனி, சந்திர லக்னத்தில் இருந்து 8ல் இருந்தால் தேவையற்ற கஷ்ட நஷ்டங்கள் ஏற்படும். கவலைகள் நோய்கள் கண் கலங்க வைக்கும். பசி பட்டினி வாட்டும். பணியாட்கள் கீழ்படியார். யாரும் நம்பமாட்டர்கள்.
 • சனி, சந்திர லக்னத்தில் இருந்து 9ல் இருந்தால் நோய்கள் வாட்டும். பொருள் இழப்பு, வறுமை உண்டாகும். மனப்போரட்டம் உண்டாகும்.
 • சனி, சந்திர லக்னத்தில் இருந்து 1௦ல் இருந்தால் புதிய தொழில் அல்லது உத்தியோகம் கிடைக்கும். பொருள் விரயமாகும். கெட்ட பெயர் கிடைக்கும்.
 • சனி, சந்திர லக்னத்தில் இருந்து 11ல் இருந்தால் தீராக்கோபம் வரும், அணைவரும் அஞ்சுவர். பிறர் சொத்து வந்து சேரும். வேறு ஒருவரை மணக்க வேண்டிய பெண் இவரை மணப்பாள். பெயரும் புகழும் உண்டாகும். காரிய வெற்றி கிட்டும்.
 • சனி, சந்திர லக்னத்தில் இருந்து 12ல் இருந்தால் கவலைகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து வந்த வண்ணம் இருக்கும்.

கோச்சார பலன் ராகு

 • ராகு சந்திரன் நின்ற ராசிக்கு வரும்போது உங்களின் ராசியில் ராகு நிற்க்கும் போது நீங்கள் தொடங்கும் எந்த ஒரு சிறிய காரியமும் தடைபடும். கெட்ட பெயர் ஏற்படும். கவலை தரும் நிகழ்வுகள் ஏற்படும். உங்களின் உறவினர்களுடன் சச்சரவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். உங்களின் பூர்வபுண்ணியத்தால் ஆதரவு வார்த்தை சொல்லுபவர்கள் இருப்பார்கள் அதனை வைத்து நீங்கள் முன்னேற்றம் அடையலாம்.
 • ராகு இரண்டாமிடத்திற்க்கு வரும்போது புகழ் செல்வம் செல்வாக்கு கிடைக்கும். தானம் செய்வதற்க்கு உங்களின் மனம் ஈடுபடும். சாப்பிடும் விசயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
 • ராகு மூன்றாம் இடத்திற்க்கு வரும்போது நல்ல தைரியம் ஏற்படும். அடிக்கடி அலைச்சலை ஏற்படுத்தும். பணத்தட்டுப்பாடு ஏற்படும். கமிஷன் தொழில் லாபம் ஏற்படாது. காதில் பிரச்சினை ஏற்படுத்தும். உங்களின் துணைவரின் உடல்நிலை பாதிக்கசெய்யும்.
 • ராகு நான்காமிடத்திற்க்கு வரும்போது வீட்டில் அடிக்கடி விஷஜந்துக்கள் வரும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் நல்லமுறையில் இருக்கும். பெரியோர்களின் ஆதரவு இருக்கும். வீட்டில் உள்ள கால்நடை ஜீவன்களுக்கு மருத்துவ செலவு ஏற்படும்.
 • ராகு ஐந்தாமிடத்திற்கு வரும்போது எதிர்பாராத பணவரவு வரும். நீங்கள் செய்கின்ற தொழிலில் நல்ல வருமானம் வரும். நுண்ணறிவை காட்டும் இடம் என்பதால் முடிவு எடுக்கமுடியாத நிலை ஏற்படும். வம்பு வழக்குகள் வரும். கணவன் மனைவி உறவுகள் நல்லவிதமாக இருக்காது.
 • ராகு ஆறாம் இடத்திற்க்கு வரும்போது குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் எடுத்த அனைத்து காரியங்களும் வெற்றி வரும். உங்களின் எதிராளி அடங்கி போவார்கள். உங்களின் துணைவர் ஆதரவாக நடந்துக்கொள்வார். விழாக்கள் கொண்டாடங்களில் ஈடுபட மனம் துடிக்கும்.
 • ராகு ஏழாமிடத்திற்க்கு வரும்போது துணைவர் வழியாக பிரச்சினை ஏற்படும். உடல்நிலை பிரச்சினை ஏற்படும். கூட்டுத்தொழில் பிரச்சினை ஏற்படும். அடிக்கடி பயணம் ஏற்படும்.வீண் செலவு ஏற்படும்.
 • ராகு எட்டாமிடத்திற்க்கு வரும்போது திடீர் விபத்துக்கள் ஏற்படும். உங்களை சுற்றி சதிவலை ஏற்படும் அதனை நீ்ங்கள் போக்குவதற்க்கு பெரும்பாடுபடவேண்டிவரும். பணம் கிடைக்காது அன்றாட செலவுக்கு கூட அடுத்தவர்களை நீங்கள் நம்பி இருக்கவேண்டிவரும்.
 • ராகு ஒன்பதாவது இடத்திற்க்கு வரும்போது தந்தைவழி உறவினர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. மேலாதிகாரிகளிடம் பணிவாக நடந்துக்கொள்ளவேண்டும் அப்படி இல்லை என்றால் அவர்களின் கோபத்திற்க்கு ஆளாக வேண்டிவரும்.
 • ராகு பத்தாமிடத்திற்க்கு வரும்போது தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர வழியில் மனம் ஈடுபடவைக்கும். பணவரவு நன்றாக இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். வேலை செய்யும் இடங்களில் உயர் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.
 • ராகு பதினொன்றாமிடத்திற்க்கு வரும்போது தொழில் சிறக்கும். தொழிலில் வருமானம் வரும். திடீர் பணவரவு இருக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உங்களின் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இரு்க்கும். வீட்டில் சந்தோஷம் இருக்கும்.
 • ராகு பனிரெண்டாம் இடத்திற்க்கு வரும்போது வீண் செலவு வரும். மருத்துவமனை செலவு ஏற்படும். செய்கின்ற தொழிலில் பிரச்சினை ஏற்படும். அனைத்து செயல்களிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் பிரச்சினை ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *