பாலவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

 • மிருகம் – புலி
 • தேவதை – பிரம்மன்
 • புலி மேல் இருக்கக் கூடிய தெய்வங்கள், புலித்தோல் போர்த்திய தெய்வங்கள் ( இவர்களை வணங்க வேண்டும்).
 • கிரகம் – ராகு
 • ராசி – ரிஷபம்
 • அதிதேவதை –  ஐயப்பன் ,கிராம தேவதைகள்.
 • மலர் – செண்பகப்பூ
 • பயன்பெறும் வருடங்கள்  – 24.
 • ஆகாரம் – பாயாசம்
 • பூசும் பொருள்-  சந்தனம்
 • அபர்ண – முத்து
 • தூபம் – வென்கடுகு, சந்தனம் கலந்து போட வேண்டும்.
 • வஸ்திரம் -சிவப்பு வஸ்திரம், புலித்தோல் வஸ்திரமும் அணியலாம்
 • பாத்திரம் – வெள்ளி பாத்திரம்

குணாதிசயம்

 • சுத்தமாக இருக்கக் கூடியவர்கள்
 • தான் வசிக்கும் ஒரு சூழல் இருக்கும் இடத்தில்தான் இவர்கள் வசிப்பார்கள்.
 • ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பார்கள்
 • இரண்டு முறை துணியை மாற்றுவார்கள்
 • எல்லாவற்றிலும் ஒரு நியமனத்தை கடைப்பிடிப்பார்கள்
 • கண்காணிப்பதில் வல்லவர்கள்
 • ( போலீஸ், சிஐடி, உளவுத்துறை)
 • ரகசியங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம்
 • இவர்களுடைய தந்தை வழியில் காணாமல் போனவர்கள் அல்லது வெளிநாடு ,வெளி மாநிலத்தில் வசிப்பவர்கள் இருப்பவர்கள்.
 • பூர்வீகம் சார்ந்த விஷயங்களில் ஒரு பிரச்சனை இருக்கும்
 • இவர்களுக்கு உதவி என்பது சொந்தங்களால் கிடைக்காது.
 • கண் சம்பந்தப்பட்ட பிரச்சினை உண்டு. (மாறுகண், கண்ணாடி அணிவது)
 • கடன் சார்ந்த விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.
 • தூக்கம் குறைவு
 • வாசனையை விரும்புவார்கள்
 • இவர்கள் தியானம், மூச்சுப் பயிற்சிகள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்
 • இவர்கள் மண் குளியல் செய்வது சிறப்பு.
 • இவர்களை புகழ்ந்து பேசினால் எல்லா காரியங்களையும் சாதித்துக் கொள்ள முடியும்
 • மிகவும் தனித்துவம் வாய்ந்தவர்கள்
 • பூசம், விசாகம், சதய நட்சத்திர காரர்கள் உதவி புரிவார்கள்.
 • உயரமான இடத்தில் பணிபுரிய விரும்புவர்கள்
 • மாடி வீட்டில் வசிப்பார்கள்
 • இவர்கள் ராகுவை பலப்படுத்தினால் போதும் இவர்கள் பல அடுக்குமாடி வீடுகளை கட்டும் பாக்கியம் கிட்டும்.
 • உணவுப் பிரியர்கள்
 • பல விஷயங்களை ஒரு செயலில் புகுத்தி வெற்றி பெறுவார்கள்
 • எல்லா பிரச்சனைகளில் இருந்தும் தப்பித்துக் கொள்வார்கள்
 • அதீத புத்திசாலித்தனம்
 • speed, ஆக்ரோஷம் உடையவர்கள்.    
 • இறப்பிற்குப்பின் தான் பேசப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள்
 • ஜெனன காலத்தில் ராகு அமர்ந்த வீட்டிலிருந்து 1-4-7-10 மற்றும் ரிஷப ராசி அல்லது ரிஷப லக்னம் பாலம் அத்தருணத்தில் பாலவ கர்ணத்தில் பிறந்த குடும்ப உறுப்பினர்களின் ராசி லக்னமாக அமையும்

பரிகாரம்

 • இவர்கள் நகம்வெட்டி போட்டுவிட்டு எந்த வேலையை செய்தாலும் அதில் வெற்றி பெறுவார்கள்
 • சிவராத்திரி வழிபாடு சிறப்பு
 • ஜீவசமாதி வழிபாடு சிறப்பு
 • இவர்கள் செவ்வாய்க்கிழமை ராகுகாலம் அல்லது வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் தங்கம் வாங்குவது ஆபரண சேர்க்கை யை தரும்.
 • ஜெனன ஜாதகத்தில் ராகு எந்த வீட்டில் அமர்ந்துள்ளார் அன்றைய தினத்தில் செய்யப்படுகின்ற செயல்கள் வெற்றியை கொடுக்கும். உதாரணமாக ராகு கன்னி ராசியில் அமர்ந்துள்ளார் என்றால் அப்போது புதன்கிழமையில் செய்யப்படுகின்ற செயல்கள் வெற்றியை தரும் குறிப்பாக புதன்கிழமையில் ராகுகாலத்தில் செய்யப்படும் செயல்கள் வெற்றியை தரும்.
 • முக்கியமான விஷயம் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் பாலவ கர்ணத்தில் சர்ப்ப தோஷ பரிகாரத்தை செய்தால் நிவர்த்தி தரும்
 • அதேபோல் ராகு கேது தோஷம் ஒரு ஜாதகத்தில் இருந்தால் அவர்களுக்கு பாலவ கர்ணத்தில் பிறந்த ஆண்/பெண் சேர்த்து வைத்தால் அந்த தோஷங்கள் எல்லாம் அடிபட்டு போய்விடும்.
 • பவானி தேவி வழிபாடு

பாலவ கர்ணத்தில் செய்யத்தக்க செயல்கள்

 • மங்களகரமான காரியங்கள் அனைத்தையும் செய்யலாம்
 • வீடு சம்பந்தமான காரியங்கள்
 • திருமணம், முகூர்த்தம் குறிப்பதற்கு, பதவி ஏற்பதற்கு
 • கோவில் திருவிழாக்கள் வைப்பது

ஸ்தலங்கள்

 • திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்
 • ஐயப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *