நட்சத்திரங்களின் வகைகள்

நட்சத்திரங்களின் வகைகள்


அஸ்வினி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம், மகம், பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி இந்த 18 நட்சத்திரங்களும் முழுமையான நட்சத்திரங்கள்.

உடைந்த நட்சத்திரங்கள்


சூரியனின் நட்சத்திரங்களான கார்த்திகை, உத்திரம், உத்திராடம், செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி என இந்த நட்சத்திரங்களே உடைந்த நட்சத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.

தலையற்ற நட்சத்திரங்கள்


கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இந்த மூன்று நட்சத்திரங்களும், தன் முதல் பாதத்தை ஒரு ராசியிலும், மற்ற மூன்று பாதங்கள் அடுத்த ராசியிலும் இருக்கும். உதாரணமாக கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதம் மேஷ ராசியிலும், மற்ற மூன்று பாதங்களும் ரிஷப ராசியிலும் இருக்கும். இப்படி முதல்பாதம் மட்டும் இழந்ததால் இந்த மூன்று நட்சத்திரங்களும் தலையற்ற நட்சத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.

உடலற்ற நட்சத்திரங்கள்


மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இந்த மூன்று நட்சத்திரங்களும் தன் முதல் இரண்டு பாதங்களை ஒரு ராசியிலும், மற்ற இரண்டு பாதங்களை அடுத்த ராசியிலும் வைத்து இருப்பதால் இதை உடலற்ற நட்சத்திரங்கள் என்பார்கள். உதாரணமாக, மிருகசீரிடம் நட்சத்திரம் தன் முதல் இரண்டு பாதங்களை ரிஷப ராசியிலும், அடுத்த இரண்டு பாதங்களை மிதுன ராசியிலும் வைத்துள்ளது.

காலற்ற நட்சத்திரங்கள்


புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இந்த மூன்று நட்சத்திரங்களும் தன் முதல் மூன்று பாதங்களை ஒரு ராசியிலும் நான்காவது பாதத்தை அடுத்த ராசியிலும் வைத்திருப்பதால் இந்த நட்சத்திரங்களை காலற்ற நட்சத்திரங்கள் என்பார்கள். உதாரணமாக, புனர்பூசம் நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் மிதுன ராசியிலும், கடைசி பாதமான நான்காவது பாதத்தை கடக ராசியிலும் வைத்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *