திதிகள் தரும் பலன்கள்

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.

வளர்பிறைத் திதிகள்

அமாவாசை நாளன்று சூரியனும் சந்திரனும் 0° (0 பாகையில்) காணப்படுவார்கள். அதனால் பூமியில் இருப்போருக்கு சந்திரனைப் பார்க்கமுடியாது. அதற்குப்பின் சந்திரன் தினமும் ஏறத்தாழ 12° சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும். 15 ஆம் நாளான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180° தூரத்தில் இருக்கும். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் இருக்கும்.

அமாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12° தூரம் விலகி இருக்கும். அந்நாள் பிரதமை எனப்படும். அதற்கு மறுநாள் மேலும் ஒரு 12° விலகியிருக்கும். அந்நாள் துதியை எனப்படும். மூன்றாம் நாள் திருதியை, 4-ம் நாள் சதுர்த்தி, 5-ம் நாள் பஞ்சமி, 6-ம் நாள் சஷ்டி,7-ம் நாள் சப்தமி. 8-ம் நாள் அஷ்டமி. 9-ம் நாள் நவமி. 10-ம் நாள்தசமி. 11-ம் நாள் ஏகாதசி. 12-ம் நாள் துவாதசி. 13-ம் நாள்திரயோதசி. 14-ம் நாள் சதுர்தசி. 15-ம் நாள் பெர்ணமி.

சந்திரன் அமாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் அல்லது சுக்கில பட்சம் என்பார்கள்.

தேய்பிறைத் திதிகள்

அதே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்வது தேய்பிறை எனப்படும். முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, எனச் சென்று அமாவாசையில் முடியும்.

இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறைத் திதிகள் என அழைக்கப்படும்.

இவைகள் அனைத்தும் சோதிடத்தில் நல்ல நாட்கள் பார்க்க உதவுகின்றன. பொதுவாக அஷ்டமி , நவமித் திதிகளில் நல்ல காரியங்கள் செய்வதை எல்லோரும் தவிர்த்துக் கொள்கின்றனர்.

 • பிரதமை
 • துவிதியை
 • திருதியை
 • சதுர்த்தி
 • பஞ்சமி
 • சஷ்டி
 • சப்தமி
 • அஷ்டமி
 • நவமி
 • தசமி
 • ஏகாதசி
 • துவாதசி
 • திரயோதசி
 • சதுர்த்தசி
 • அமாவாசை / பெளர்ணமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *